[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்திப்பு
 • BREAKING-NEWS ஷக்தி, ஜூலியை கார்னர் செய்யாதீர்கள்: ரசிகர்களுக்கு ஓவியா ரிக்வெஸ்ட்..!
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால் கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS டெல்லியில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு
 • BREAKING-NEWS அரியலூர்: தத்தனூரில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் தடியடி
 • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் 23 ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவு
 • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
 • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி புதுச்சேரி விமான நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
 • BREAKING-NEWS தமிழகத்திற்கு நீட் தேர்வு விவகாரத்தில் நிரந்தர விலக்கு மட்டுமே தேவை: முத்தரசன்
 • BREAKING-NEWS இதுதான் ஜெயலலிதாவின் வேதா நிலையம் சீக்ரெட்!
 • BREAKING-NEWS சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில் ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
 • BREAKING-NEWS அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்துடன் திமுகவை சந்திப்பதே எங்கள் நோக்கம்: செல்லூர் ராஜூ
 • BREAKING-NEWS அணிகள் இணைந்தால் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்
 • BREAKING-NEWS தேடப்படும் நபர் என அறிவிக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றம் வருகை
சிறப்புக் கட்டுரைகள் 24 May, 2017 05:35 PM

ஆதி மனிதன் தோற்றம் ஆப்பிரிக்காவில் இல்லையாம்... ஆய்வாளர்கள் புதிய தகவல்

first-human-ancestors-evolved-in-europe-not-africa

மனித இனத்தின் தோற்றம் ஆப்பிரிக்காவில் நிகழவில்லை. மாறாக ஐரோப்பா கண்டத்திலேயே நிகழ்ந்தது என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

72 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்களை வைத்து ஆய்வு மேற்கொண்ட ஜெர்மனியின் டூபின்ஜென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிஎல்ஓஎஸ் ஒன் (PLOS ONE) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், மனித இனத்தின் தோற்றம் குறித்த வரலாறு ஆய்வு தரவுகளின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது. மனித இனத்தின் மூதாதையர்களாகக் கருதப்படும் கிரேட் ஏப்ஸ் எனப்படும் குரங்கின் அடுத்த பரிணாம வளர்ச்சி நாம் தற்போது எண்ணுவதைவிட பலநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சத்தியம் செய்கிறார்கள் ஜெர்மனி ஆய்வாளர்கள். இதற்கு சாட்சியாக மனித இனத்தின் மூதாதையரான கிரேகோபேதிகஸ் ஃப்ரேபெர்கி (Graecopithecus freybergi ) எனும் குரங்கின் எச்சங்களைக் காட்டுகின்றனர். கீரீஸில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த குரங்கின் கீழ்தாடை மற்றும் பல்கேரியாவில் கண்டெடுக்கப்பட்ட முன்தாடை பல் ஆகியவற்றின் தோற்றம் குறித்து நவீன தொழில்நுட்பம் மூலம் ஆய்வுகள் மேற்கொண்ட ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

“எல் கிரேகோ (El Graeco) என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் கீழ்தாடை எலும்புகளில் மனித இனத்தைப் போலவே ஈறுகள் வளர்ச்சி கிரேகோபேதிகஸ் ஃப்ரேபெர்கி குரங்கினத்துக்கும் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். மனித இனம் சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து பரவலாக இருக்கும் நிலையில், இந்த புதிய தகவல் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று ஆய்வு குறித்து பேசிய டூபின்ஜென் பல்கலைக்கழக ஆய்வாளர் ஜோஹன் ஃபஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close