[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
 • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
 • BREAKING-NEWS பொறையார் போக்குவரத்துக் கழகம் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டம்
 • BREAKING-NEWS இந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகுள்: ஆய்வில் தகவல்
 • BREAKING-NEWS பொறையார் அரசு போக்குவரத்துக்கழக கட்டட உயிரிழந்தவர்களில் 7 பேர் ஓட்டுநர், ஒருவர் நடத்துநர்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேற்கூரை இடிந்து விபத்து; 8 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
 • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
 • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
 • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
சிறப்புக் கட்டுரைகள் 15 May, 2017 09:12 PM

ஆகாயக் கப்பல்: ஏர்பஸ் போக்குவரத்தை மிஞ்சும் ஏர்லேண்டர்10

world-s-largest-aircraft-airlander-10-takes-to-the-skies

உலகின் ஆகப் பெரிய விமானமாகக் கருதப்படும் ஏர்லேண்டர் 10 எனும் ஆகாயக் கப்பல் அதன் இரண்டாவது பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

இங்கிலாந்து நிறுவனம் தயாரித்த ஏர்லேண்டர் 10 ஆகாயக் கப்பல் 92 மீட்டர் நீளமும், 43.5 மீட்டர் அகலமும், 26 மீட்டர் உயரமும் கொண்டாத வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர், பனி மற்றும் பாலைவனம் என பலத்தரப்பட்ட நிலப்பரப்பிலும் கூட தரையிறங்கவும் டேக் ஆஃப் செய்யும் தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் தேவைக்காக முதலில் இந்த ஆகாயக் கப்பல் கட்டமைக்கப்பட்டது. பிறகு இந்த முடிவை அமெரிக்க ராணுவம் கைவிட்டதால் பயணிகள் பயண்பாட்டிற்காக மாறியமைக்கப்பட்டது. மணிக்கு 148 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் செல்லவும் 2 வாரம் வரை வானத்தில் பறக்கவும் அதனால் முடியும் என்பது வியப்பின் உச்சம்.

லண்டனின் கார்டிங்டன் (Cardington) விமானத்தளத்தில் இருந்து ஏர்லேண்டர் 10 ஆகாயக் கப்பல், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடத்திய தரையிறங்கும் சோதனையின் போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. தற்போது மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ள இந்த விமானம் தரை இறங்கும் போது மோதாமல் தடுக்க புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஏர்லேண்டர் விமானம் லண்டனின் கார்டிங்டன் விமானத் தளத்தில் இருந்து தனது பயணத்தை மீண்டும் துவக்கியுள்ளது. 3 மணிநேரம் தொடர்ந்து பறந்துவிட்டு, மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. ஏர்லேண்டர் விமானம் இடைவிடாது பயணிக்கும் தன்மை கொண்டிருப்பதால் ஆகாய மார்க்கமாக கண்டம் விட்டு கண்டம் செல்லும் போக்குவரத்தில் புதிய மாற்றங்கள் நிகழலாம் என்று கணிக்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close