[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
 • BREAKING-NEWS முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்: கேரள முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
 • BREAKING-NEWS மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை: தமிழிசை
 • BREAKING-NEWS ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது; விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது: இயக்குநர் ஷங்கர்
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சிறப்புக் கட்டுரைகள் 13 May, 2017 07:20 PM

வந்தாச்சு நடைமேடை திரை கதவுகள்.. இனி மெட்ரோவில் இல்லை தற்கொலை

no-suicide-in-metro-stations

தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறையில் ஒன்றுதான் ரயில்வே தண்டவாளம். முன்னதாக எலக்ட்ரிக், எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் தற்போது ஒரு படி மேலாக மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

நாட்டின் தலைநகரான டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களில் மெட்ரோ ரயில் தனது சேவையை தொடரும் நிலையில் இதன்முன் ஒரு சிலர் பாய்ந்து தங்களது உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டில் இங்கு ஏறக்குறைய 100 பேர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

சாதாரணமாக நீங்கள் மெட்ரோவில் பயணம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் செல்லும் வழித்தடத்திற்கான நடைமேடையில் நிற்கும் போது ரயில் வருவதற்கு முன் உங்களால் சர்வசாதரணமாக தண்டவாளத்தை பார்க்க முடியும். தற்கொலை செய்பவர்களோ, ரெயில் வரும் நேரத்தில் சரியாக நடைமேடையில் இருந்து பிளாட்பாரத்தில் குதித்து தற்கொலை செய்கிறார்கள்.

ஆனால் இதனை தடுப்படுதற்காக இந்தியாவிலிலேயே முதன்முறையாக சிறப்பு முறை தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. நாளை முதல் தொடங்கப்படும் திருமங்கலம்- நேரு பூங்கா இடையிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையில் இத்திட்டம் அறிமுகமாகிறது.

இதன்படி, மெட்ரோவில் பயணம் செய்வதற்காக நீங்கள் நடைமேடையில் நிற்கும் போது உங்களால் தண்டவளாத்தை பார்ப்பது என்பது இயலாது. நீங்கள் நிற்கும் பிளாட்பார்மில், நடைமேடை திரை கதவுகள் அமைக்கப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சரியாக உங்களுக்கான தண்டவாளத்தில் நிற்கும் போது, உங்கள் முன்னால் உள்ள நடைமேடை திரை கதவுகள் திறக்கப்படும். அதற்கு நேராகவே மெட்ரோ ரயிலின் கதவுகளும் திறக்கப்படும். இதன் மூலம் உங்களால் தண்டவாளத்தில் குதிக்கவோ, வேறு எதுவும் செய்யவோ முடியாது. ஒரே வழி தான். உங்களால் மெட்ரோ ரயிலில் ஏற மட்டும் தான் முடியும். நீங்கள் ஏறிய பின் மெட்ரோ கதவுகள் தானாகவே அடைக்கப்படும். இதனால் தற்கொலை என்பது நிகழாது.

எனவே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் தற்கொலை தடுக்க ஒரு முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close