[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

நீதிபதி கர்ணன்: ஐந்து மாதத்தில் நடந்த அதிரடித் திருப்பங்கள்

what-happened-to-karnan-in-last-five-months

கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான கர்ணன் அவரது பதவி காலம் முழுவதுமே சர்ச்சைக்குரியவராகவே இருந்து வந்திருக்கிறார். ஆனால் அவர் உச்சநீதிமன்றத்துடன் கொண்ட மோதல் போக்கால் சர்ச்சைக்குள் சாதியம் சேர்த்து வீரியமாகிக் கொண்டிருக்கிறது விவகாரம். உச்சநீதிமன்றத்தின் முக்கிய நீதிபதிகளுக்கும் அவருக்கும் இடையே பல மாதங்களாக, மூண்டுவந்த அக்கப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டி உள்ளது. உச்சநீதிமன்றம் கர்ணனுக்கு எதிராக உத்தரவிடுவதும் அதற்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கர்ணன் உத்தரவிடுவதும் நீதித்துறைக்கே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கர்ணன் தலைமறைவாக இருந்து வருகிறார். சென்னையில்தான் அவர் இருப்பதாகவும் வெளிநாட்டிற்குச் சென்று விட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

ஜனவரி

தற்போதைய மோதல் போக்கிற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது கடந்த ஜனவரி 23-ல். ஊழல் செய்ததாக 20 நீதிபதிகள் மற்றும், சட்டத்துறை அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியதில் இந்த விவகாரம் ஆரம்பித்தது.

பிப்ரவரி

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி, நீதிபதி எழுதிய இக்கடிதத்தையும், கடந்த காலத்தில் தனது சக நீதிபதிகள் மீது ஊழல் மற்றும் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி நீதிபதி கர்ணன் எழுதிய இது போன்ற கடிதங்களையும், நீதிமன்ற அவமதிப்புக்கு உகந்ததாக முடிவெடுத்த ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இது குறித்து அவரிடம் விளக்கம் கோரியது. இது தொடர்பாக பிப்ரவரி 13-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வேண்டிய நீதிபதி கர்ணன் அன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும், கர்ணனுக்கு ஒரு வாய்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், அவர் மார்ச் 10-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

மார்ச்

ஆனால், இந்த உத்தரவையும் நீதிபதி கர்ணன் புறக்கணித்ததால், அவர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், மார்ச் 31-ஆம் தேதியன்று மேற்கு வங்க மாநில போலீஸ் தலைமை அதிகாரி, நீதிபதி கர்ணனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இதுகுறித்து மேலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை அவர் நீதிமன்ற அல்லது நிர்வாக ரீதியான பணிகள் எதையும் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும் கர்ணன் அசைந்து கொடுக்கவில்லை. அன்றே, கர்ணனும் ஓர் உத்தரவு பிறப்பித்தார்.

தலித் சமூகத்தை சேர்ந்த தன் மீது ஏழு நீதிபதிகளும் சாதி பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினார். தன் மீது பாகுபாடு காட்டுவதற்காக தனக்கு எதிராக உத்தரவிட்ட நீதிபதிகள் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு அதிர வைத்தார் கர்ணன். அவரிடம் கைது வாரண்ட் வழங்கப்பட்ட போது, அதனை ஏற்க மறுத்து, அந்த உத்தரவு சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என எதிர்த்தார். அத்தோடு நிற்கவில்லை.

மே

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற 6 நீதிபதிகள் நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தில் அவர் செயல்பட தடை விதிக்கப்பட்டு விட்டதால் தனது வீட்டிலேயே தற்காலிக நீதிமன்றம் ஒன்றை அமைத்து அந்த ஏழு நீதிபதிகளும் வெளிநாடு செல்வதை தடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தன்னை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்ட அதே மே மாதம் 1-ஆம் தேதி, நீதிபதிகள் தனது வீட்டில் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அன்றே கர்ணனின் மனம் சமநிலை தவறுகிறதா என்பதை மே 4-ஆம் தேதியன்று ஆராய வேண்டும் என மருத்துவர் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மே 8-ஆம் தேதியன்று இக்குழு தனது மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. தான் நல்ல உடல்நலன் மற்றும் மனநலனுடன் இருப்பதாக தெரிவித்த கர்ணன், தனது உடல்நலன் மற்றும் மனநலன் குறித்து தனது மனைவியும், இரு மகன்களும் திருப்தியுடன் இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவு தலித் நீதிபதிக்கு எதிரான அவமானம். தான் மருத்துவ பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே, டெல்லி காவல்துறை இயக்குநருக்கு ஏழு நீதிபதிகளையும் மனநல குழுவுக்கு முன்னர் ஆஜராக செய்து, அவர்கள் மனநல பாதிப்பு அடைந்துள்ளனரா என்று ஆராய்ந்து மே 7-ஆம் தேதியன்று மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர், மற்றும் 6 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் அவர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறி நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்தது உச்சநீதிமன்றம். நீதிபதி கர்ணனை கொல்கத்தா காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். இதனிடையே 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் கர்ணன்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close