[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

நடமாடும் சொகுசு வீடு

furrion-motor-home

அமெரிக்காவை சேர்ந்த ஃப்யூரியான் என்ற நிறுவனம் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா செல்ல விரும்பும் கோடீஸ்வரர்களுக்கு சிறப்பான வசதிகளை கொண்ட சொகுசு மோட்டார் இல்லத்தை உருவாக்கியுள்ளது.

எலிசியம் என்ற பெயரிடப்பட்டுள்ள நகரும் சொகுசு வீடு ஒன்றை 45 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சில சொகுசு அபார்மென்ட் வீடுகளில் இருப்பதைவிட அதிக வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மோட்டார் இல்லத்தின் உள்பகுதியில் அமர்வதற்கான பெரிய அளவிலான சோஃபா மற்றும் படுக்கை வசதி, 75 இன்ச் திரையுடன் கூடிய எல்.இ.டி டிவி பொருத்தப்பட்டிருக்கிறது. குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோஓவன், இன்டக்ஷன் ஸ்டவ் கொண்ட சமையல் அறையும் இருக்கிறது. இந்த மோட்டார் இல்லத்தில் அனைத்தும் சென்சார் சுவிட்சுகள் கொண்டதாக இருக்கிறது. இரண்டு பேர் தங்குவதற்கான சொகுசு படுக்கை வசதியுடன் ஒரு அறையும் இடம்பெற்றுள்ளது.

மரத்தாலான மாடிப்படிகளில் மேற்புறம் சென்றால் வெந்நீர் குளியலை அனுபவிக்க தண்ணீர் தொட்டி, ஓய்வாக அமர்ந்து இயற்கையை ரசிப்பதற்கான இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. தேவைப்படும்போது பயணிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மோட்டார் இல்லத்தின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் வைக்கப்பட்டுள்ளது. தரை இறங்கத் தேவையான ஹெலிபேட் வசதியும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளுடன் கூடிய இந்த மோட்டார் இல்லம் இந்திய மதிப்பில் 17 கோடி ரூபாயாகும். ஆனால், இந்த மோட்டார் இல்லத்தை விற்பனை செய்யப்போவதில்லை என்றும் தங்களது புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கிலே இந்த சொகுசு மோட்டார் இல்லத்தை உருவாக்கியுள்ளதாக ஃப்யூரியான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close