[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
 • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
 • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலராக பிரவீன்நாயர் பொறுப்பேற்றுக்கொண்டார்
சிறப்புக் கட்டுரைகள் 05 May, 2017 05:12 PM

எஸ்மா சட்டம் சொல்வது என்ன?

esma-act-details

முதுநிலை மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தேவைப்பட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்று, அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் எஸ்மா சட்டம் குறித்து தெரிந்து கொள்வோம்.

1981-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம், போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை கொடுக்கிறது.

அதன்படி, தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு, விமானம், ரயில், சாலை போக்குவரத்து போன்றவை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் உணவுப் பொருள் கொள்முதல், விநியோகம் போன்ற துறைகளும், பாதுகாப்பு, துறைமுகங்கள் போன்றவையும் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன. மின்சாரம், குடிநீர், பால் விநியோகம், வங்கி போன்றவற்றையும் அத்தியாவசிய சேவைகளாக கருத இச்சட்டம் வகை செய்கிறது.

அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஸ்டிரைக் போன்ற போராட்டங்களில் இறங்குவதை இச்சட்டம் தடை செய்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோ, போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோ, தேவையேற்படும் பட்சத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பதோ கூட சட்ட விரோதம்தான்.

அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை வாரண்ட் ஏதுமின்றி கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டு. அரசு ஊழியர்கள் எனில் பணி நீக்கம், அத்தியாவசிய சேவைத்துறையில் உள்ள பிற தொழிலாளர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

2002-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்த போது, சுமார் 2 லட்சம் பேரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பணி நீக்கம் செய்தது இச்சட்டத்தை பயன்படுத்தியே. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே, நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close