[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர்
 • BREAKING-NEWS நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் கைது
 • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
 • BREAKING-NEWS கடல்சீற்றம் தணிந்ததால் நாகையில் 53 கிராம மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
 • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
 • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
சிறப்புக் கட்டுரைகள் 03 May, 2017 06:01 PM

அதிகப்படியான சன்ஸ்கிரீன்: வைட்டமின் டி குறைபாடு: புற்றுநோய் வாய்ப்பு

sun-screen-cause-vitamin-d-deficiency-leads-to-cancer

சூரிய ஒளியில் நேரம் செலவு செய்வதை நிறுத்தியதாலும், சன்ஸ்கிரீன் அதிகமாக பயன்படுத்துவதாலும் உலகின் பெரும்பாலான மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிக்கையான தி ஜர்னல் அப் தி அமெரிக்கன் ஆஸ்டியோபாதிக் அசோசியேசன் இல் வெளியான ஆய்வறிக்கையில், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் உலகில் 1 பில்லியன் மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அல்லது போதுமான வைட்டமின் டி இல்லாததால் பலவித தீவிரமான தோல் நோய்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஆப்பிரிக்கர்களில் 95 சதவீத இளைய தலைமுறையினருக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மனித இனங்களின் பண்புகளின் அடிப்படையில், வைட்டமின் டி மாறுவதால் தோலின் நிறம் மனித இனங்களுக்கிடையே மாறுபடுகிறது. மக்கள் சூரிய ஒளியில் குறைந்த நேரம் செலவிடுவதாலும், அப்படியே வெளியில் சென்றாலும் சன்ஸ்கிரீன் பூசிக்கொண்டு போவதாலும், உடலில் வைட்டமின் டி உற்பத்தியாவது தடைபடுவதாகவும், டூரோ பல்கலைக்கழக துணைப்பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான கிம் ஃபோட்டஹார் தெரிவித்தார்.

மேலும், மிதமான சூரிய ஒளியை பெரும் பட்சத்தில் மக்களை தோல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம். பரம்பரை நோய் அல்லது நாள்பட்ட நோயான 2 ஆம் நிலை நீரிழிவு நோய் மற்றும் நீரிழிவு சம்பந்தப்பட்ட நோய்கள் உணவுகளிலிருந்து வைட்டமின் டி கிடைப்பதை தடுத்துவிடுகிறது என்று அவர் கூறுகிறார்.

சூரிய ஒளியில் நடமாடுவதன் மூலம் வைட்டமின் டி உடலில் உற்பத்தியாகிறது. வைட்டமின் டி மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் மறைமுகமாக உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். இதன் பலனாக, வைட்டமின் டி உடலின் செயல்பாடுகளில் மிக பெரிய பங்கெடுக்கிறது. செல் வளர்ச்சி, நோய் எதிர்ப்புசக்தி, நரப்பு தசை வளர்ச்சி மற்றும் உடலில் கட்டிகளை குறைப்பது போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளில் வைட்டமின் டி பங்காற்றுகிறது.

தசை வலுவின்மை, எலும்பு முறிவு போன்றவைகள் வைட்டமின் டி குறைபாடுகளுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவப்பரிசோதனை செய்ய வேண்டும். வைட்டமின் டி குறைபாடு இருக்கும் பட்சத்தில், மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி-யை அதிகரிக்கவும், சீராக வைத்துக் கொள்ளவும், 5 முதல் 30 நிமிடங்கள் கை, கால்கள் தெரியும்படி வாரத்திற்கு 2 நாட்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிட்டால் போதுமானது. சூரிய ஒளியில் நடமாடும் நேரமானது. அவர் வாழும் புவியியல் அமைப்பு, தோலின் நிறம் மற்றும் இனக்குழுவின் பண்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாரு மாறுபடும். இதற்காக கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்று கிம் கூறுகிறார்.

பால், முட்டை, மீன், முளைக்கட்டிய தானியங்கள், காளான் போன்ற உணவு வகைகள் வைட்டமின் டி நிறைந்தவை. மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்க்கண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. வைட்டமின் டி குறைபாடு சம்பந்தமாக ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. திசுக்கள் இறுகுதல், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு, தொற்றுகள், சுவாச கோளாறுகள், புற்றுநோய் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட நோய்கள் வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படுகிறது என்று கிம் தெரிவித்தார்.

வைட்டமின் டி உடலின் செயல்பாடுகளில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவும், வைட்டமின் டி அளவை பரிசோதித்தும், குறைவாக இருந்தால் முறையான மருத்தும் எடுத்துக்கொள்ளவும் வேண்டும். தற்போது தேவையான வைட்டமின் டி-யின் அளவு 21 முதல் 30 நானோகிராம்/மில்லி லிட்டர் எனவும், 20 நானோகிராம்/மில்லி லிட்டர் இருந்தால் வைட்டமின் டி குறைபாடு உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுவதாக கிம் கூறுகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close