[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமியின் இரு அறிவிப்புகளும் யாருக்காக?: புகழேந்தி
  • BREAKING-NEWS ஆட்சிக்கு ஆபத்து என்பது ஆட்சியாளர்கள் கையில்தான் உள்ளது: ஜெயானந்த்
  • BREAKING-NEWS கபாலிக்கு கிடைக்காமல் போனதை கைப்பற்றிய மெர்சல்!
  • BREAKING-NEWS மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது இயற்கையானதே: அமைச்சர் நடராஜன்
  • BREAKING-NEWS இரு அணிகளும் இணைவதுதான் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்: வானிலை மையம்
  • BREAKING-NEWS நீதி விசாரணை மூலம் பொதுச்செயலாளர் சசிகலா குற்றமற்றவர் என நிரூபணமாகும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS யார் முதலமைச்சராக இருந்தாலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS திருவனந்தபுரம்- சென்னை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படும்: அமைச்சர்
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கருத்துக் கேட்பு
  • BREAKING-NEWS ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்திப்பு
சிறப்புக் கட்டுரைகள் 26 Apr, 2017 07:02 PM

ஜியோவின் வலையில் விழுந்தது எவ்வளவு பேர்?

customers-for-jio

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக குறுகிய காலத்தில் 11 கோடியாக அதிகரித்துள்ளது. இலவச டேட்டா, அழைப்புகள், குறுஞ்செய்திகள் என அது அறிவித்த பல அதிரடிச் சலுகைகளால் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலை தொடர்பு சேவையை கடந்த வருடம் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கியது. இலவச டேட்டா, அழைப்புகள், குறுஞ்செய்திகள் என பல சலுகைகளை வழங்கியதால் ஜியோவின் வாடிக்கையாளர்கள் கிடுகிடுவென உயர்ந்தனர். ரிலையன்ஸ் ஜியோ சேவையைத் தொடங்கிய 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்களைப் பிடித்தது. 170 நாட்களில் அந்த எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்தது. அதாவது நாள் ஒன்றுக்கு 6 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர். தற்போது இந்தியாவில் வயர்லெஸ் சந்தாதாரர்களில் 6 சதவீதம் பேர் ஜியோவின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதை 15 சதவீதமாக உயர்த்த ஜியோ இலக்கு நிர்ணயித்துள்ளது.

டேட்டா சேவையை பொறுத்த வரையில் உலகத்திலேயே மிக பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது ஜியோ. ஜியோ நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றிற்கு 110 கோடி ஜிபி டேட்டா பயன்படுத்தி வருகின்றனர், சுமார் 220 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால்களும், 220 கோடி வீடியோ கால்களும் பறக்கின்றன. சீனாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்களிலும் பயன்படுத்தப்படுவதை விட 50% கூடுதல் டேட்டா ஜியோவால் பயன்படுத்தப்படுகிறது. மொபைல் மூலம் இணையதளத்தில் உலாவும் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் மேலும் ஒரு லட்சம் பேரைக் கூட்ட ஜியோ திட்டமிட்டுள்ளது.

ஜியோ கடந்த மாதம் கட்டண சேவையை அறிமுகப்படுத்தியது. ஆனால் மற்ற நிறுவனங்களை ஒப்பிடும் போது டேட்டா கட்டணம் மிக குறைவு என்பதாலும், அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை என்பதாலும் ஜியோ தனது வாடிக்கையாளர்கள் பலரை தக்கவைத்துள்ளது. கால்கள் மற்றும் குறுஞ்செய்திகள் இலவசம் என்பதை ஜியோ நிறுவனம் மேலும் ஒரு வருடத்திற்கோ ஒன்றரை வருடத்திற்கோ தொடரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோவுடன் போட்டி போட மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close