[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் உடலை துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவர ஏற்பாடு நடக்கிறது
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் செய்வது குறித்து தலைமைக் கழகம் முடிவு செய்யும்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஆரோவில் பொன்விழா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்
  • BREAKING-NEWS மதுரை விமானநிலையத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் முழக்கம்
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீ தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல்
  • BREAKING-NEWS தமிழில் விஜய் நடிப்பில் ஸ்ரீதேவி நடித்து வெளியான புலி திரைப்படமே அவரின் கடைசி படமாகும்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்

வாசிப்பு இருந்தால் நேசிப்பு வரும்

reading-is-the-best-habbit

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் வரும் என்பார்கள். ஏப்ரல் முதல் வாரம் உலக நூலக வாரம். இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

சிந்தனையின் தூண்டுகோல் புத்தகம். வாசிக்கும் பழக்கம் அருகி வரும் இக்காலத்தில், இப்பழக்கம் உடைய சிலருக்கு துணையாக இருப்பது நூலகங்கள். பரந்து பட்ட அறிவைப் பெற பல்துறை புத்தகங்களையும் வாசிப்பது அவசியம் என்பது கற்றறிந்த பெரியவர்களின் கருத்து. வாசிக்கும் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலேயே வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமை என்கிறார்கள் படைப்பாளர்கள்.

பாடப் புத்தகங்கள் மட்டுமே பயன்தராது, பரந்து விரிந்த உலகில், பல விதமான நூல்களையும் வாசிக்க, மாணவர்கள் பழக வேண்டும் என்பது ஆசிரியர்களின் அறிவுரை. வருங்காலச் சந்ததிக‌ள் பல சங்கதிகளை தெரிந்துகொள்ள வேண்டுமானால், நூலகங்கள் நிலைத்திரு‌த்தல் அவசியம். நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன் என்பதை விட, நேரம் ஒதுக்கி வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே வாசிப்பதை நேசிப்பவர்களின் கருத்து.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close