[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை
 • BREAKING-NEWS சேலம்: ஆத்தூரில் 5ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது
 • BREAKING-NEWS ட்ரம்பின் ஒரே ஒரு ட்வீட்.... 5.7 பில்லியன் டாலரை இழந்த அமேசான்
 • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம்
 • BREAKING-NEWS கர்நாடகாவில் புதிய அணைகளை கட்டலாம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
 • BREAKING-NEWS டெல்லியில் ராஜ்நாத் சிங்குடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திப்பு
 • BREAKING-NEWS உ.பி.யில் மேலும் 34 குழந்தைகள் பலி
 • BREAKING-NEWS மெரினாவில் நினைவேந்தல் நடத்திய வழக்கு- திருமுருகன் காந்தியின் காவல் ஆக.24வரை நீட்டிப்பு
 • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கு- மறுவிசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு
 • BREAKING-NEWS நீட் அவசரச் சட்டம்- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் விளக்கமளிக்க உத்தரவு
 • BREAKING-NEWS பாதுகாப்பானதா சீன மொபைல்கள்?: விளக்கம் கேட்கிறது மத்திய அரசு
 • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க 3ஆவது நாளாக தடை நீட்டிப்பு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,535 கன அடியில் இருந்து 21,947 கன அடியாக அதிகரிப்பு
 • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.44, டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.22
சிறப்புக் கட்டுரைகள் 04 Apr, 2017 04:23 PM

சோதனைகளை சாதனைகளாக்கும் தன்னம்பிக்கை திருநங்கைகள்

transgender-achievements

பிரித்திகா யாசினி... நாட்டிலேயே முதன்முறையாக காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்றிருக்கும் திருநங்கை. அரசியல் தலைவர்களும் சமூக வலைதள பயன்பாட்டாளர்களும் பிரித்திகா யாசினிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையை எட்ட அவர் சந்தித்த பிரச்னைகளையும், இவரைப் போன்றே தடைகளைத் தகர்த்து சாதனை புரிந்த திருநங்கைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

பிரித்திகா யாசினி: காவல் உதவி ஆய்வாளர் வேலைக்கான விண்ணப்பத்தில், திருநங்கை என்ற பிரிவு இல்லாததால் பிரித்திகா யாசினி அனுப்பிய விண்ணப்பம் முதலில் நிராகரிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய பிரித்திகா, தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்று தற்போது காவல் உதவி ஆய்வாளராக தர்மபுரியில் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

கல்கி சுப்பிரமணியம்: சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்ட திருநங்கை. 2008-ஆம் ஆண்டு சகோதரி என்ற அமைப்பை நிறுவியவர். சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தால் கருத்தரங்கில் பேசுவதற்காக அழைக்கப்பட்டவர்.

மனாபி பந்தோபாத்யாய்: திருநங்கைகளுக்கான முதல் இதழை வெளியிட்டவர். 1995-ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான OB MANAB என்ற இதழை வெளியிட்டார். 2015-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் மகளிர் கல்லூரியின் தலைமை நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். இந்தியாவில் ஒரு கல்லூரிக்கு தலைமைப் பொறுப்பேற்ற முதல் திருநங்கை இவர்தான்.

அஞ்சலி லாமா: திருநங்கையாக இருந்து மாடலிங் துறையில் கால்பதித்தவர். லேக்மி பேஷன் வீக்கில் இவரது ஒய்யார நடை அனைவரையும் வியக்க வைத்தது. அஞ்சலியின் வாழ்க்கைப் போராட்டம் ஆவணப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.

ரோஸ் வெங்கடேசன்: திருநங்கையாக இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக உயர்ந்தவர். 2008-ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கத் தொடங்கினார். இவரது துணிவும் தன்னம்பிக்கையும் பலருக்கு வியப்பை அளித்ததோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குதல், செய்தி வாசித்தல் போன்ற துறைகளில் திருநங்கைகள் கால் பதிக்கவும் வழிகாட்டியாக அமைந்தது.

அக்கை பத்மசாலி: இந்தியாவில் கவுரவ ‌டாக்ட‌ர் பட்டம் பெற்ற‌ முதல் திருநங்கை. சமூக செயற்பாட்டாளரான அக்கை பத்மசாலி பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட‌வர்களின் உரிமைகளு‌க்கு குரல் கொடுத்து வருகிறார். இவரது செயல்களை கவுரவிக்கும் வகையில் ஐ‌க்கிய நாடுகள் சபையின்‌‌ ஒரு அங்கமாக பெங்களூருவில் அமைந்துள்ள அமைதி மற்று‌ம் கல்விக்கான பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இவரை கவுரவித்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close