[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
சிறப்புக் கட்டுரைகள் 03 Apr, 2017 02:44 PM

இதயம் காக்க சில டிப்ஸ்

some-tips-to-protect-heart

சிந்தனை தொய்வில்லாமல் ஆரோக்கியமாகத் தொடர்வதற்கு இதயத்தின் நலன் மிக அத்தியாவசியமானது. இதயம் மற்றும் மூளை நலன்களுக்கான மிக முக்கிய உணவுப் பரிந்துரைகளை அளிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தில் சிறு பிரச்சனை இருந்தாலும் ஒட்டுமொத்த உடலும் சோர்ந்துவிடும். எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை, அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க, நட்ஸ்கள் மட்டுமின்றி, விதைகளும் உதவும். இங்கு இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் விதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதயத்தின் ஆரோக்கியத்தைச் சீராக்கும் 5 முக்கிய விதை உணவுகள் இவை:

1. ஆளி விதைகள்

2. பூசணி விதைகள்

3. எள்ளு விதைகள்

4. வெந்தயம்

5. சியா விதைகள்

மனித உடலில் மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிக்கின்றது. போதிய ஆக்ஸிஜன் கிடைக்காதபோதுதான் மூளை சோம்பேறித்தனப்பட்டு கொட்டாவியைத் தருகிறது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க, பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க, விட்டமின் ஏ, ஈ மற்றும் பி காப்ளக்ஸ் உள்ள உணவுகளும் தேவை.

சில வேலைகளை எப்படி முடிப்பது அல்லது ஆரம்பிப்பது என பல குழப்பங்களுடனே வேலை செய்து தோல்வியை தழுவுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பி-6, பி-12 மற்றும் ஃபோலேட் ஆகிய இந்த மூன்று பி காப்ளக்ஸ் விட்டமின்களை எடுத்துக் கொண்டால், நரம்புகள் ஊக்கம் பெறும். தெளிவாகத் தகவல்களைக் கொண்டு போய் மூளையில் சேர்க்கும். மூளை அமைதியுடனும், உத்வேகத்துடனும் செயல்படும் என பல மருத்துவ ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close