[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று 10 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS இயக்குநர் ஐ.வி. சசி மரணத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல்
 • BREAKING-NEWS தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் யாராலும் மிஞ்ச முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்
 • BREAKING-NEWS 2 மாத கால பரோல் முடிந்து பிற்பகல் 3 மணிக்கு வேலூர் சிறைக்கு திரும்புகிறார் பேரறிவாளன்
 • BREAKING-NEWS ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை
 • BREAKING-NEWS கந்துவட்டிக் காரனை விட மோசமானவர்கள் அரசியல்வாதிகளும், பதவியில் இருப்பவர்களும்: சுசீந்திரன்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையில் சிக்கிய ஈரோடு நெசவுத் தொழிலாளியின் கிட்னியை எடுப்பது தடுத்து நிறுத்தம்
 • BREAKING-NEWS ஈரோட்டிலும் கந்து வட்டி கொடுமை: கிட்னி விற்க நிர்பந்தம்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் தமிழிசை உருவபொம்மையை எரிக்க முயன்ற போலீசார், விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு
 • BREAKING-NEWS பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி காலமானார்
 • BREAKING-NEWS டிஜிட்டலுக்கு வாங்க: தயாரிப்பாளர்களுக்கு விஷால் அழைப்பு
 • BREAKING-NEWS புதுச்சேரி, காரைக்காலில் அரசு தொடக்கப்பள்ளிகளில் பிஸ்கட் வழங்கும் திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமை பற்றி 0424- 2260211 மற்றும் 7806917007 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்
 • BREAKING-NEWS ஆக்ரா- லக்னோ விரைவு சாலையில் போர் விமானங்களை தரையிறக்கம் செய்து சோதனை
சிறப்புக் கட்டுரைகள் 24 Mar, 2017 04:09 PM

அசோகமித்திரன்....எதார்த்தம் நழுவாத எழுத்து

ashoka-mithran-life-history

அசோகமித்திரனின் எழுத்து பாணி வித்தியாசமானது. எந்த விதமான ஆரவாரமும் இல்லாமல் எதார்த்தம் நழுவாமல் இருக்கும் அவருடைய எழுத்து.

அமைதி தவழும் அவரது எழுத்துக்கள் படிப்பவர்களின் மனதில் ஆழமாய் ஊடுறுவும் வல்லமை பெற்றவை. சிரிப்போ அழுகையோ அதிர்ச்சியோ எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி மிகை இல்லாமல் கொந்தளிப்பில்லாமல் பதிவு செய்வார் அசோகமித்ரன். ஆனால் படிப்பவர்களுக்கு அத்தனை உணர்வுகளாலும் பிடிக்கப்பட்டு கொந்தளிக்கும் மாயம் நிகழும்.

தியாகராஜன் என்ற பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் பிறந்தார். 21 வயதில் சென்னையில் குடியேறினார். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றினார். அந்த அனுபவம் அவருடைய நிறையக் கதைகளில் வெளிப்பட்டிருக்கிறது.உதாரணமாக புகழ் பெற்ற அவரின் புலிக்கலைஞன் சிறுகதையிலும் மானசரோவர் நாவலிலும் அவரது ஸ்டுடியோ அனுபவம் வெளிப்பட்டிருக்கும். அவரது ஸ்டுடியோ அனுபவம் முழுவதையும் தொகுத்து மை இயர்ஸ் வித் பாஸ் என்ற பெயரில் ஆங்கில நூலாக எழுதியுள்ளார் அசோகமித்திரன். தண்ணீர், கரைந்த நிழல்கள், 18வது அட்சக்கோடு போன்ற அவரது நாவல்கள் மறக்கமுடியாதவை.

அசோகமித்திரனின் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது அப்பாவின் சினேகிதர் சிறுகதைத் தொகுப்பு 1996ல் சாகித்திய விருதைப் பெற்றது. கணையாழி என்ற இலக்கியப் பத்திரிக்கையில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார் அசோகமித்திரன். தமிழக அரசின் இலக்கியச் சிந்தனை விருது, எம்.ஜிஆர். விருது, என்டிஆர் தேசிய இலக்கிய ‌விருது, க.நா.சு விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் அசோகமித்ரன். தமிழ் இலக்கிய உலகில் அசோகமித்திரன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இன்னொருவர் நிரப்புவது கடினம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close