JUST IN
 • BREAKING-NEWS எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது
 • BREAKING-NEWS பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்ததால் டெல்லி பயணம்: ஓ.பன்னீர்செல்வம்
 • BREAKING-NEWS குடியரசுத் தலைவராக மீராகுமார் வெற்றி பெற வாழ்த்துக்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்-க்கு ஆதரவு தெரிவிக்க டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
 • BREAKING-NEWS எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு மத்திய அமைச்சரவை நன்றி
 • BREAKING-NEWS பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
 • BREAKING-NEWS அரசியலுக்கு வருவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர் மீராகுமார்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு
 • BREAKING-NEWS சபாநாயகர் தலைமையில் அவை உரிமைக்குழு கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS கடன்களை தள்ளுபடி செய்வது என்பது நிரந்தர தீர்வாகாது: வெங்கய்ய நாயுடு
 • BREAKING-NEWS ஜனாதிபதி வேட்பாளர் குறித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
சிறப்புக் கட்டுரைகள் 20 Mar, 2017 11:54 AM

இதுதான் இரட்டை இலையின் கதை!

Cinque Terre

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற, சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்றன இப்போது. தலைமை தேர்தல் ஆணையம் இரண்டு அணியின் கருத்துக்களையும் 22-ம் தேதி கேட்டபின், இறுதி முடிவெடுக்க இருக்கிறது.

தமிழகத்தில் 1977ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த 7 பொதுத் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி தேடித்தந்து, அதை ஆட்சியில் அமர வைத்த இரட்டை இலை சின்னம் தற்போது யாருக்கு என்ற ஊசலாட்டத்தில் இருக்கிறது.

அந்தச் சின்னம் எப்படி அதிமுகவுக்கு வந்தது?

திமுகவில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர், அதிமுகவைத் தொடங்கியது, 1972-ம் ஆண்டில். ஆரம்பித்த சில மாதங்களிலேயே, 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வந்தது. திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம்.ஜி.ஆருக்கு தனக்கிருக்கும் மக்கள் செல்வாக்கையும், தன் வலிமையையும் காட்ட வேண்டிய கட்டாயம். இதனால் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றார்கள் கட்சித் தலைவர்கள். போட்டியிடலாமா வேண்டாமா என மனப் போராட்டம் எம்.ஜி.ஆருக்கு. பிறகு தலைவர்களின் நம்பிக்கை வார்த்தையை அடுத்து, அங்கு வேட்பாளரை நிறுத்தினார். அந்த வேட்பாளர் மாயத்தேவர். அதிமுகவின் முதல் வேட்பாளர்.

அப்போது கட்சிக்கு என்று தனி சின்னம் இல்லை. மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சிரியாக், அந்தத் தேர்தலுக்காக 16 சின்னங்களை மாயத்தேவருக்கு காண்பித்தார். சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் அது. அவற்றில் ஏழாவது சின்னமாக இருந்தது இரட்டை இலை. அதை டிக் செய்து எம்.ஜி.ஆரிடம் சொன்னவர் மாயத்தேவர். ’நிறைய சின்னம் இருக்கும்போது, இரட்டை இலையா?’என்றார் எம்.ஜி.ஆர்.

‘தலைவரே, இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற வின்சென்ட் சர்ச்சில் தனது வெற்றியை பறைசாற்ற வெற்றி அடையாளமான ’வி’யை இரண்டு விரல்கள் காட்டி நின்றார். நீங்கள் இரண்டு விரல்களை மட்டும் காட்டுங்கள். மக்கள், சின்னத்தைப் புரிந்துகொண்டு வாக்களிப்பார்கள்’ என்று மாயத்தேவர் சொன்னதும் ஏற்றுக்கொண்டார் எம்.ஜி.ஆர். இப்படி மாயத்தேவரால் அடையாளம் காணப்பட்ட சின்னம்தான், இரட்டை இலை. இதை மாயத்தேவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads