JUST IN
 • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது சோகமாக உள்ளது: துரைமுருகன்
 • BREAKING-NEWS கருணாநிதி நலமுடன் உள்ளார்; நாள்தோறும் பத்திரிகையை படிக்கவைத்து கேட்டுக்கொள்கிறார்: துரைமுருகன்
 • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
 • BREAKING-NEWS முதல்பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்: தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு
 • BREAKING-NEWS விளையாட்டில் மாநில, தேசிய அளவில் சாதனை படைக்கும் மாணவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
 • BREAKING-NEWS கால தாமதம் ஆனாலும் அதிமுக இரு அணிகள் இணைவது உறுதி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS தனியார் பாலில் கலப்படம் உள்ளதா என அரசு ரகசியமாக ஆய்வு செய்து வருகிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS சென்னையில் காணாமல் போனவர்களில் மே மாதத்தில் மட்டும் 452 பேர் கண்டுபிடிப்பு: சென்னை காவல்துறை
 • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 31 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்: காவல்துறை
 • BREAKING-NEWS சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது
 • BREAKING-NEWS பருத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தால் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைக்கண்ணு
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
சிறப்புக் கட்டுரைகள் 27 Feb, 2017 01:49 PM

ஆஸ்கர் விருதில் இடம் பெற்ற போர்வீரன்..

Cinque Terre

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலிஸ் நகரில் உள்ள ஹாலிவுட் ஸ்டுடியோவில் உள்ள டோல்பி தியேட்டரில் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

உலக அளவில் சினிமாத் துறையில் சாதித்த கலைஞர்களை அங்கீகரிக்கும் இந்த விருதின் அடையாளமாக போர்வீரன் சிலை ஒன்று வழங்கப்படுகிறது. இந்த வழக்கம் 1929ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பு 1927ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டவுடன் அதன் நோக்கம் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்காக லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள பில்ட்மோர் உணவகத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது திரைகலைஞர்களை கவுரவிக்க ஆண்டுதோறும் விருது ஒன்றினை வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக ஒரு விருதினை வடிவமைக்க ஒப்புதல் பெறப்பட்டது.

திரைப்படம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட பிலிம் ரோல்கள் மீது கையில் வாளுடன் போர் வீரன் நிற்பது போன்ற ஒரு விருதினை எம்ஜிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த செட்ரிக் கிப்சன் என்பவர் வடிவமைத்தார். இந்த வடிவத்தினை லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சேர்ந்த சிற்பி ஜார்ஜ் ஸ்டேன்லி நிஜமாக்கினார். வெண்கலத்தால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்படும் இந்த விருதுகள் 13.5 இன்ச் உயரமும், 8.5 பவுண்ட் எடையும் கொண்டது. இரண்டாம் உலகப்போரின் போது வெண்கலத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் 3 ஆண்டுகள் பிளாஸ்டரில் தயாரிக்கப்பட்டு வர்ணம் தீட்டி விருதுகள் வழங்கப்பட்டன. போர் முடிந்த பின்னர் அந்த விருதுகளை தங்க முலாம் பூசப்பட்ட விருதுகளாக ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பு மாற்றிக் கொடுத்தது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads