[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை

கங்காருவின் தாய் பாசத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

details-about-kangaroo

வயிற்றில் பையுடன் காணப்படும் வினோத விலங்கான கங்காரு ஆஸ்திரேலியாவிலும் நியூகினியாவிலும் அதிக அளவில் காணப்படுகின்றது.

மார்சுபியல் வகை விலங்குகளுக்கு வயிற்றில் நெகிழும் தன்மையுடைய பை போன்ற அமைப்பு இருக்கும். இந்த வகை விலங்குகளுக்கு முழு வளர்ச்சியடையாத நிலையில்தான் குட்டிகள் பிறக்கும். அந்தக் குட்டிகள் முழு வளர்ச்சியடையும் வரை தாய் தன் வயிற்றிலிருக்கும் பையில் வைத்து குட்டியை வளர்க்கும்.

கங்காருக்கள் மார்சுபியல் வகையில் மேக்ரோபாட் என்ற பிரிவினைச் சேர்ந்தவை. மேக்ரோபோட் என்பதற்கு மிகப் பெரிய பாதங்களைக் கொண்டவை என்பது பொருள்.

சிவப்பு கங்காரு, ஈஸ்டர் க்ரே கங்காரு, வெஸ்டர்ன் க்ரே கங்காரு, ஆண்டிலோப் கங்காரு என 4 வகைகள் உள்ளன. இதில், சிவப்பு கங்காரு மிகவும் பெரியது. வலிமையான பின்னங்கால்களையும் நீண்ட பாதங்களையும் உடைய கங்காருகள் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகம் ஓடும்.

கங்காருவின் வால் தசை மிகவும் வலுவானது. வேகமாக ஓடித் திரும்பும்போது கீழே விழாமல் சமன்படுத்தும் வேலையினை வால் செய்யும். எதிரிகளைத் தாக்கும்போது முன்னங்கால் அல்லது பின்னங்கால்களால் பலமான உதை கொடுக்கும்.

கங்காரு குட்டிகள் ஜோய் என்று அழைக்கப்படுகின்றன. பிறந்த கங்காரு குட்டி 2 கிராம் எடை மட்டுமே இருக்கும். சுமார் 6 மாதங்கள் அம்மாவின் வயிற்றுப் பையினுள் இருந்து முழு வளர்ச்சி பெறும்.

ஆஸ்திரேலியாவின் தேசிய முத்திரையில் இடம் பெற்றுள்ள பெருமை கங்காருக்கு உண்டு.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close