[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

எண்ணி எண்ணி அல்ல...தேய்த்து தேய்த்து.! டிஜிட்டல் மயமாகும் இந்தியர்கள் வாழ்க்கை

indians-life-traveling-to-fully-digital

அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்பு இந்தியர்களின் வாழ்க்கையை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது என்றே கூற வேண்டும். பணத்தை எண்ணி எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்த மக்கள் தற்போது தேய்த்து தேய்த்து தரத் தொடங்கியுள்ளனர்.

அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு இந்தியர்கள் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்வது 3 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கால மாற்றத்தின் வேகத்திற்கேற்ப திருத்தணி முருகன் கோயிலும், ஸ்ரீரங்கம் கோயிலும் கூட ஸ்வைப் இயந்திரம் மூலம் காணிக்கையை பெறத் தொடங்கி விட்டன. திருமணங்களில் ஸ்வைப் இயந்திரங்கள் மூலம் எளிதாக மொய் வசூலிக்கும் அதிசயமும் அரங்கேறத் தொடங்கியுள்ளது. சாதாரண பர்ஸ்கள் வைத்திருந்தவர்கள் இ-வாலட் எனப்படும் மின்னணு பர்ஸ்களுக்கு மாறி வருகின்றனர். பெரம்பலூரில் ஒரு ஆட்டோ டிரைவர் இந்த முறையில் தான் பணம் வசூலித்து வருகிறார்.

பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போக்கு ஒன்றரை மாதங்களில் 20% அதிகரித்துள்ளதாக கூறுகிறது அரசின் புள்ளிவிவரம். ரயில் டிக்கெட்டுக்கான பணத்தைக் கூட ஸ்வைப் முறையில் செலுத்தும் வசதி வரத் தொடங்கியுள்ளது. மாநகரங்கள் மட்டுமல்ல. குக்கிராமங்களும் கூட டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் காந்தலவாடி என்ற சிறிய கிராமம் 100% மின்னணு பணப்பரிமாற்றத்துக்கு மாறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மின்னணு முறை பணப் பரிமாற்றங்கள் எளிமையானது. பாதுகாப்பானது எனக் கூறப்பட்டாலும் இதிலும் அதிகபட்ச கவனம் தேவை என்பதே உண்மை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close