[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தோழி.... உடன்பிறவா சகோதரி.... அதிமுக பொதுச்செயலாளர்.... வியக்கத்தக்க சசிகலாவின் பயணம்!

jayalalithaa-friend-sasikala

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்தவர் சசிகலா. 1982ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு வி.எஸ். சந்திரலேகா ஐஏஎஸ் மூலம் அறிமுகமானார். சந்திரலேகாவின் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார் நடராஜன். இவருடைய மனைவி தான் சசிகலா. இவர்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி.

இவர்கள் சென்னைக்கு வந்த பிறகு ஆழ்வார்பேட்டையில் வீடியோ கடை ஒன்றை சசிகலா நடத்தி வந்தார்.

ஜெயலலிதா பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகளை வீடியோ எடுக்கும் வேலைகளை ஆரம்ப கட்டத்தில் செய்து வந்தார் சசிகலா. சிறிது காலத்திற்குப்பின் ஜெயலலிதாவின் நன்மதிப்புக்குள்ளாகி தமிழகத்தின் முக்கிய பிரமுகரானார்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் பணிபுரியும் அனைத்து வேலையாட்களையும் அமர்த்தியவர் சசிகலா தான்.

இரண்டு முறை போயஸ் இல்லத்தில் இருந்து சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றினார். அதன் பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதி போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலா மீண்டும் நுழைந்தார்.

பொது நிகழ்வுகளில் ஜெயலலிதாவுடன் பங்கேற்காமல் சிறிது காலம் விலகியிருந்த சசிகலா, கடந்த முறை ஜெயலலிதா முதலமைச்சர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட விழாவில் பங்கேற்றார்.

ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சசிகலாவைத் தவிர வேறு யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வலியுறுத்தினர். இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிடம் ஒப்படைத்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close