[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

2016 மோடி சந்தித்த டாப் 5 சர்ச்சைகள்

modi-met-the-top-5-controversies-in-2016

2016 ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் மோடி சந்தித்த சர்ச்சைகள் ஏராளம். இவற்றில் குறிப்பிட்டு கூறவேண்டியது பணமதிப்பிழப்பு

விவகாரம் தான்.

வெளிநாடுகளில் கறுப்பு பண ஒழிப்பு குறித்து பேசி வந்த மோடி, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் செல்லாக்காசு

விவகாரத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டார். கடைசி வரை அவர் பேச

முன்வராததால் நாடாளுமன்ற இரு அவைகளும் அமளி ஏற்பட்டு முடங்கின.

தேச பக்தி பற்றிப் பெருமிதத்தோடு பேசும் மோடி, தேசியக் கொடியை அவமதித்தாகவும் சர்ச்சை எழுந்தது

மலேசியா: ஆசியன் மாநாட்டில், ஜப்பான் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசும்போது, நமது தேசியக் கொடி தலைகீழாக

வைக்கப்பட்டிருந்தது. இதை மோடி கவனிக்காமல் இருந்துள்ளார் என்று புகைப்படங்களுடன் ஊடகங்களில் செய்தி வெளியாகி அவரை

சங்கடத்தில் ஆழ்த்தியது.

அது மட்டுமல்ல அவரே தேசியக் கொடியை துண்டைப் போல தரையில் விரித்து அதன் மீது அமர்ந்தார் என்று வழக்கு ஒன்றும்

தொடரப்பட்டது.

பீகார் மாநிலம், முஸாஃபர்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ஜீன், 21-ம் தேதி

சர்வதேச யோகா தினத்தன்று, சண்டிகரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை துண்டைப்போல

தரையில் விரித்து அதன் மீது அமர்ந்திருந்தார் எனவும் முகத்தையும், கைகளையும் துடைப்பதற்கு தேசியக்கொடியை பயன்படுத்தினார்

எனவும் கூறப்பட்டது. இதுவும் மோடி மீது சர்ச்சையைக் கிளப்பியது.

மோடியின் பிறந்ததினம் குறித்து காங்கிரஸ் சர்ச்சை

மோடியின் பிறந்ததினம் குறித்தும் ஒரு சர்ச்சை கிளம்பியது. மூன்று ஆவணங்களில் மூன்று பிறந்த தினம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி

சர்ச்சையைக் கிளப்பியது. பிரதமர் அலுவலக இணைய தளத்தில் மோடியின் பிறந்த தினம் 1950, செப்டம்பர் 17 என

குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் படித்த வாத் நகர் பள்ளிச் சான்றிதழில் 1949 ஆகஸ்டு 28-ந்தேதி என உள்ளது, டெல்லி பல்கலைக்கழகத்தில்

உள்ள ஆவணத்தில் மோடியின் பிறந்த தினம் 1958, அக்டோபர் 1 என குறிப்பிடப்பட்டுள்ளது.. இப்படி மூன்று பிறந்த நாட்களில் எது

உண்மை என கேள்வி எழுப்பி காங்கிரஸ் சர்ச்சையைக் கிளப்பியது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விளம்பர தூதுவரா பிரதமர் நரேந்திர மோடி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விளம்பர தூதுவரைப் போல பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருந்தது

மோடி குறித்து கிளம்பிய மற்றொரு சர்ச்சை. 4ஜி சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதையொட்டி பல்வேறு

பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்தது. அதில் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்

என விளம்பரப்படுத்தியது. இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை எவ்வாறு

பயன்படுத்தலாம் என சர்ச்சைகள் எழுந்தன.

சோமாலியாவுடன் கேரளாவை ஒப்பிடுவதா...

பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் சோமாலியா நாட்டுடன் கேரள மாநிலத்தை ஒப்பிட்டு மோடி பேசியது, சமூக வலைதளங்களில் பெரும்

விவாதத்தை கிளப்பியது. பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, கேரளாவில் வசிக்கும் பழங்குடியின மக்கள்

மத்தியில் குழந்தை இறப்பு விகிதம் சோமாலியாவில் இருப்பதைவிட அதிகம் என்று குறிப்பிட்டு அவர் சர்ச்சையில் மாட்டினார்.

‪பிரதமரின் கருத்துக்கள் ஆதாரமற்றவை என்றும் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும் கோரி, பிரதமருக்கு உம்மன் சாண்டி கடிதம்

ஒன்றையும் எழுதினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close