[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

’வாஜ்பாய்’ எனும் அரசியல் சகாப்தம்... பிறந்ததின சிறப்பு பகிர்வு

an-atal-journey-some-interesting-facts-about-vajpayee

இந்திய அரசியலில் அழுத்தமான கால்தடத்தைப் பதித்துள்ள தலைவர்களின் முக்கியமானவராகக் கருதப்படுபவர் அடல் பிகாரி வாஜ்பாய்.

நாட்டின் பிரதமர் பதவியை வாஜ்பாய் ஒருநாள் அலங்கரிப்பார் என்று முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் புகழப்பெற்ற பெருமை பெற்றவர். நாற்பதாண்டு அரசியல் அனுபவம் உடைய வாஜ்பாய் தனது 92ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

நாட்டின் பிரதமராக குறைந்த காலமே பதவி வகித்தாலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டினை அணு ஆயுத நாடாக அறிவித்து உலகையே இந்தியா என்ற பெயரை உச்சரிக்கச் செய்தவர். அவரது ஆட்சிக்கலாத்திலேயே பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பொக்ரான் அணுஆயுத சோதனை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவால் சாத்தியமானது. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாயிக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சிகள் கடந்தும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் சிறந்த நட்பு பாராட்டியவர் வாஜ்பாய் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேச்சு உண்டு.

* கான்பூர் டிஏவி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்துள்ள வாஜ்பாய், தனது தந்தையுடன் ஒரே கல்லூரியில் படித்தவர். தந்தையும், தனயனும் ஒரே விடுதி அறையில் தங்கி படித்தனர். சட்டம் படிக்க இருப்பது குறித்த தனது விருப்பத்தினை வாஜ்பாய் வெளியிட்டபோது, சட்டப் படிப்பின் மீதான தனது ஆசையையும் அவரது தந்தை கூறவே, இருவரும் ஒன்றாகவே கல்லூரிப் படிப்பை மேற்கொண்டனர். ஒரே அறையில் தங்கியிருந்தாலும், இருவரும் வெவ்வேறு வகுப்புகளில் படித்தனர்.

* நாட்டின் பிரதமராகப் பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் எனும் சாதனைக்கு சொந்தக்காரர் வாஜ்பாய். நாட்டின் 10ஆவது பிரதமராக கடந்த 1998ம் ஆண்டில் அவர் பதவியேற்றார்.

* மாநிலங்களவை உறுப்பினராக 1962ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த வாஜ்பாய், மக்களவை உறுப்பினராக 7 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக இருமுறையும் பதவி தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

*ஐக்கியநாடுகள் சபையில் இந்தியில் உரையாற்றிய முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முதல் பிரதமர் வாஜ்பாய்.

* கடந்த 1975ம் ஆண்டு ஜூனில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலைப் பிரகடனம் செய்தபோது பல மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தார். முதல்முறையாக காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து ஜனதா கட்சி 1977-ல் அரியணை ஏறிய போது வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

* நாட்டின் பிரதமராக முதல்முறையாக வாஜ்பாய் கடந்த 1996ம் ஆண்டு மே 16ம் தேதி பதவியேற்றபோது, அவரது பதவிக்காலம் மே 28ம் தேதி வரையில் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. இரண்டாவது முறையும் வாஜ்பாயின் பிரதமர் பதவிக்காலம் அதிக காலம் நீடிக்கவில்லை. கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் பதிமூன்று மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் இருந்தார். தோல்விகளில் இருந்து பாடம் கற்ற வாஜ்பாய், பல்வேறு அரசியல் கட்சிகளை இணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டமைத்தார். அந்த கூட்டணி 1999ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று அக்டோபர் 13ம் தேதி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். அந்தமுறை பதவிக்காலம் முழுமையையும் வாஜ்பாய் பூர்த்தி செய்தார். அரசியலில் மிகப்பெரிய கூட்டணி அமைந்தது அனேகமாக அதுவே முதல்முறை.

* இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய பெருமை வாஜ்பாயையே சேரும். கடந்த 1998ல் பேச்சுவார்த்தை அளவில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 1999ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-லாகூர் இடயே முதல் பேருந்து சேவை இயக்கப்பட்டது. கடந்த 2001ல் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட பதற்றத்தால் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

* உடல்நலக்குறைவால் வாஜ்பாயிக்கு கடந்த இருபது ஆண்டுகளில் பத்து முறை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரால் சரிவர பேசமுடிவதில்லை. இதனால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close