[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

உலகையே சிரிப்பால் அளந்த சார்லி சாப்ளினின் 39-ஆம் ஆண்டு நினைவு தினம்..!

today-charlie-chaplin-memorial-day

தனது நகைச்சுவைத் திறனால் உலகையே மகிழ்வித்த சார்லி சாப்ளின் 39-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சிறு துளி அளவு மீசை கொண்டிருந்த இருவரில், ஒருவர் ஹிட்லர், மற்றொருவர் சாப்ளின். திருமணத்துக்கு முன் பாடிக்கொண்டிருந்த சார்லி சாப்ளின், ஒருநாள் செய்த குறும்புகள் எல்லாரையும் கவர்ந்துவிட்டன. அதிலிருந்து காமெடி நடிகராக களமிறங்கினார். பெற்றோர் இன்றி வறுமை, பசி, தோற்ற காதல்கள், கல்வியே கிடைக்காத வாழ்க்கை என அவர் வாழ்வில் தொடர்ந்த சோகத்திலும் திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்த நாயகன் சார்லி சாப்ளின்.

ஒரே வருடத்தில் பன்னிரெண்டு ஹாலிவுட் படங்கள் நடித்து சாதனை புரிந்த சிரிப்பு மேதை. சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பிறந்தார். சிரிப்பு நடிகர் மட்டுமின்றி, நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பல கோணங்களை உடையவர். சாப்ளின், 1977-ம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் நாள் தனது 88-ஆவது வயதில் வேவேவில் இறந்தார். இவரின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close