[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தொடக்கம் உருவான விதம்..!

christmas-celebration-story

கிறிஸ்துமஸ் என்றால் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த பண்டிகை கொண்டாட்டம் எப்போது தொடங்கியது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

கிறிஸ்ம் மற்றும் மாஸ் என்ற இரண்டு சொற்களின் இணைப்பே கிறிஸ்துமஸ் என்ற சொல்லாக உருவெடுத்தது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டை இதுவரை யாராலும் சரியாகக் கணிக்கவோ, உறுதிப்படுத்தவோ முடியவில்லை என்பதால் கிமு 7-க்கும் கி.மு. 2 க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று நம்பப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவ மதம் சிறிது சிறிதாக காலூன்றி கொண்டிருந்த காலத்தில் ஐரோப்பியாவின் பல பகுதிகளிலும் குளிர்கால திருவிழாக்கள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வந்தன. அந்த காலகட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்களை திருப்தி படுத்துவதற்கு ஒரு விழா தேவையிருந்ததாலேயே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கின என்கின்றனர் ஆய்வாளர்கள். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் போப்பாக இருந்த முதலாம் ஜூலியஸ்தான் டிசம்பர் 25-ஆம் தேதியை கிறிஸ்துமஸாக அறிவித்ததாக அவர்கள் சொல்கின்றனர். இன்று உலக அளவில் கிறிஸ்தவ மதத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பெரும்பாலானோர் டிசம்பர் 25-ஆம் தேதியை கிறிஸ்துமஸ் என்று ஏற்றுக்கொள்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, ஜனவரி மாதம் 6-ஆம் தேதியை கிறிஸ்து பிறந்த தினமாக அல்பேனியர்கள் கொண்டாடி வருகின்றனர். எத்தியோப்பியா, ரஷ்யா, உக்ரைன், செர்பியா போன்ற நாடுகளில், கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஜனவரி 7-ம் தேதியன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுமுறை என்ற வழக்கம் தொடங்கியது அலபாமாவில்தான்.

கிறிஸ்துமஸையொட்டி வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் முதன்முதலில் தொடங்கியது இங்கிலாந்து நாட்டில். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் பண்டிகையாக இருந்தாலும், கிறிஸ்துமஸ் அன்பின் மகத்துவத்தையும், பகிர்தலின் மேன்மையையும் சொல்லும் நாளாகவே இன்று இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close