[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அறிவுக்கு முதுமை இல்லை என நிரூபிக்கும் 102 வயது விஞ்ஞானி...!

australia-s-oldest-working-scientist

உடலுக்கு முதுமை வந்து சோர்வை ஏற்படுத்தலாம் ஆனால் அறிவுக்கு முதுமை இல்லை என உற்சாகமாக இந்த வயதிலும் இயங்கி வருகிறார்.

மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் குட் எனும் விஞ்ஞானி. எடித் கோவன் பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வுப் பணியை தொடர்ந்து வரும் டேவிட் குட் ஆல் 102 வயதிலும் இளைஞனைப் போல இயங்குகிறார்.

டாக்டர் குட் ஆல் எக்காலாஜி (சூழலியல்) பிரிவில் 70 ஆண்டுகளாக சுமார் 100க்கும் மேற்பட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு ஆராய்ச்சி கட்டுரைகளை படைத்துள்ளார். தற்போது எடித் கோவன் பல்கலைக்கழகத்தில் கௌரவ ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இவரை வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவிட்டது.

ஆனால் டேவிட் ‘என் பார்வையில் பாதுகாப்பு என்பது தேவையற்ற ஒன்று. நான் இன்னும் பல பயனுள்ள வேலைகளை தொடர வேண்டியுள்ளது. எனவே என் பணியே எனக்கு பாதுகாப்பு என தைரியமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்’. ஆராய்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வயது ஒரு தடை இல்லை என வெற்றிநடை போடும் டேவிட் குட் இன்றைய இளைஞர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கிறார். டேவிட் குட் பணியாற்ற எடித் கோவன் பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒரு புதிய தனி அலுவலகத்தை ஏற்பாடு செய்து வருகிறார்கள் இப்போது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close