[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
  • BREAKING-NEWS “நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”- தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு

சீறிப்பாயும் சிறுத்தை... வேகத்திற்கு என்ன காரணம்?

reason-beyond-leopard-speed

தரையிலேயே வேகமாக ஓடும் விலங்கு, பூனை குடும்பத்திலேயே மாறுபட்ட உடலமைப்புகளை கொண்டது என பல்வேறு அதிசயங்களை உள்ளடக்கிய விலங்கு சிறுத்தை.

ஒரு விநாடிக்கு 10 மீட்டர், ஒரு மணி நேரத்திற்கு 113 கிலோமீட்டர் என தரையில் வசிக்கும் விலங்கினங்களில் வேகமாக ஓடும் திறன் கொண்டது. சிறுத்தையின் இந்த வேகத்திற்கு காரணம், ஓடுவதற்காகவே உருவாக்கப்பட்டு உள்ள அதன் உடலமைப்பு. சிறுத்தைகள் பொதுவாக 3 அடி உயரம் 4 அடி நீளம் கொண்டவை. உடலின் நீளத்தில் பாதி வால் பகுதிதான். சிறுத்தைகளின் எடை 57 கிலோ வரை தான் இருக்கும். உடல் எடை குறைவாக உள்ளதே வேகமாக ஓட காரணம்.

சிறுத்தை வேகமாக ஓடும் போதும், ஓடிக்கொண்டே திரும்பும்போதும் கீழே விழாமல் உடலை சமநிலை படுத்திகொள்ள அதன் வால் பகுதி உதவுகிறது. இதயமும், வேகமாக ஓடும் போது அதற்கேற்றாற்போல ரத்தத்தை பம்ப் செய்கிறது. பெரிய நுரையீரலை கொண்டுள்ளதால் அதிகப்படியாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுத்து, சிறுத்தையால் இயங்க முடிகிறது.

சிறுத்தையின் மற்றொரு வரப்பிரசாதம் வளையும் தன்மை கொண்ட முதுகுத் தண்டும், தட்டையான விலா எலும்பும். இவை இரண்டும் கால்களை வேகமாக இயக்க செய்ய உதவுகின்றன. சிறுத்தையின் பாத அமைப்பும், மற்ற பூனையின விலங்குகளை போல அல்லாமல் ஓடுவதற்கு ஏற்றாற்போல அமைந்துள்ளது. இப்படி நீளமான உடல், குட்டியான தலை, குறைந்த எடை கொண்ட உடல், ஒல்லியான கால்கள் என ஓடுவதற்காகவே படைக்கப்பட்ட விலங்குதான் சிறுத்தை. இந்த ஓட்டம் தான் சிறுத்தைகளை மற்ற விலங்குகளிடம் இருந்து காப்பாற்றுகிறது. ஏனெனில் எதிரிகளை கண்டால் சண்டையிடாமல் ஓடி தப்பிக்கவே சிறுத்தைகள் விரும்புமாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close