[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

சிறுவயது விளையாட்டை நினைவுபடுத்தும் Mannequin challenge ஒளிப்பதிவு..

history-of-mannequin-challenge

சமூக வலைதளங்கள் அன்றாட வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ளன. தற்போது அதில் mannequin challenge ஒளிப்பதிவு முறை வேகமாக பரவி வருகிறது.

Mannequin challenge என்றால் என்ன?

பிரபலங்களின்‌ mannequin challenge ஒளிப்பதிவு முறை நமது சிறிய வயது விளையாட்டை நினைவுக்கு கொண்டு வருகிறது. “அட்டாக்” என்றும் “ரிலீஸ்” என்றும் சொல்லி அசைய விடாமல் செய்து விளையாடும் முறையை சற்றே விரிவு படுத்துகிறது இம்முறை. என்ன செய்து கொண்டிருந்தாலும் அப்படியே நிற்க வைத்து எடுக்கும் இந்த ஒளிப்பதிவு முறை சாதாரண முறையை விட சற்று கடினமானது என்கின்றனர் ஒளிப்பதிவாளர்கள்…

பதிவு செய்ய ஆரம்பித்தவுடன் உடல் அசைவில்லாமல் நிற்பது சற்றே சிரமம் என்றாலும் நண்பர்களோடும் உறவினர்களோடும் சேர்ந்து செய்யும் போது சிரமம் தெரிவதில்லை என்கின்றனர் இவர்கள்… அதோடு ஒளிப்பதிவை முடித்துவிட்டு அந்த பதிவை பார்க்கும் போது வேடிக்கையாகவும், விநோதமாகவும் மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறுகின்றனர் இவர்கள்.

ஹிலரி கிளிண்டன், மிச்செல் ஒபாமா என பிரபலங்கள் பலரும் mannequin challenge செய்த நிலையில், இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. மேலை நாட்டில் தோன்றிய இம்முறையானது திருமணங்களில் தற்போது அதிக அளவில் செய்யப்பட்டுவருகிறது. சுப இல்லத்தார் மட்டுமல்லாமல் ஐடி நிறுவனங்களும், நடன வகுப்புகளும் இந்த mannequin challenge-ஐ செய்யத் தொடங்கிவிட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close