JUST IN
 • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
 • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
 • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
 • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
 • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
 • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
 • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
சிறப்புக் கட்டுரைகள் 17 Dec, 2016 03:09 PM

நிலவுக்குச் சென்றாரா?.. ஹிட்லர் மரணத்தை சுற்றும் மர்மங்கள்

Cinque Terre

உலகப்புகழ் பெற்ற பல தலைவர்களின் மரணம் குறித்த முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கப்படாமலேயே இருக்கிறது. அந்த வகையில் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ஃப் ஹிட்லரின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.

ஹிட்லர் நிலவுக்குச் சென்று விட்டார்:

ஜெர்மனியை ஆட்சி செய்துவந்த ஹிட்லர், அவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா மற்றும் நாசா விண்வெளி மையம் ஆகியவைகளை விட முந்தி நின்றதாகவும், விஞ்ஞானிகள் மூலம் ரகசிய விண்வெளி ஓடம் மூலம் நிலவுக்குச் சென்று விட்டதாகவும் கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஹிட்லர் வெர்சன் 2.0:

உயிரியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட ஹிட்லர், தனது நண்பரும் விஞ்ஞானியுமான மருத்துவர் ஜோசப் மெங்காலே உதவியுடன் தன்னைப் போலவே ஒருவரை குளோனிங் முறையில் உருவாக்கி விட்டதாகவும் ஒரு கதை இணையத்தில் உலவுகிறது.

அண்டார்டிகாவில் ஹிட்லர்:

புவியின் தென்துருவத்தில் நாஜிக்கள் படை மூலம் ஹிட்லர் 1930-களில் ராணுவ தளம் ஒன்றினை அமைத்ததாக கூறப்படுகிறது. ஹிட்லர் அங்கு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 1943ம் ஆண்டில் நாஜிக்களின் ராணுவத் தளபதியாக இருந்த அட்மிரல் கார்ல் டோனிட்ஸ் ஹிட்லருக்காக நீர்மூழ்கிக் கப்பலை கட்டமைத்ததில் ஜெர்மனி பெருமையடைகிறது என்று கூறியிருந்தார். எனவே அந்தக் கப்பலில் ஹிட்லர் அண்டார்டிகாவுக்கு சென்றிருப்பார் எனக் கருதப்படுகிறது. நாஜிக்களின் நீர்மூழ்கிக் கப்பலை இங்கிலாந்து ராணுவம் 1950-களில் அழித்தது.

ஸ்பெயினில் ஹிட்லர்:

ரான் டி ஹான்சிங் என்பவர் எழுதியுள்ள ஹிட்லர்ஸ் எஸ்கேப் என்ற புத்தகத்தில், ஹிட்லர் 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஸ்பெயினுக்குத் தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். ஹிட்லர் மரணமடைந்ததாக கூறப்பட்ட பதுங்கு குழியில் கண்டெடுக்கப்பட்ட உடல் ஹிட்லரின் உடல் இல்லை என்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்த வாதத்தினை அந்த எழுத்தாளர் முன்வைத்தார். அதேபோல ஹிட்லரின் மனைவியான ஈவா ப்ரன் உடலும் கடைசி வரை அடையாளம் காணப்படவில்லை.

தற்கொலை செய்துகொண்டார் ஹிட்லர்:

ஹிட்லர் மரணம் குறித்து உலகின் பெரும்பாலானவர்களின் நம்பிக்கை இதுவாகவே இருக்கிறது. அரசியல் நிலை தனக்கு எதிராக திரும்புவதைக் கண்ட ஹிட்லர் இனியும் நாம் உயிரோடு இருக்கக் கூடாது என முடிவெடுத்து, சயனைடினை உட்கொண்டும், தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும் தனது மனைவியுடன் கடந்த 1945ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹிட்லரின் உதவியாளர்கள் அவரது உடலை எரித்ததாகவும், முழுமையாக உடல் எரியாததால், அதை புதைத்ததாகவும் நம்பப்படுகிறது.

ஹிட்லரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்ற மர்மம் கடந்த 60 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads