[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

பாவை நோன்பும் - பஜனைப் பாடலும்!..... மார்கழி இசை விழாவின் வரலாறு

margazhi-month-specials

புயல் மழையைத் தொடர்ந்து சென்னையில் பொழியத் தொடங்கிவிட்டது மார்கழி இசை மழை. இந்த இசை சீசன் தொடங்கியது எப்படி? இதன் பாரம்பரியம் என்ன? இங்கே தெரிந்து கொள்வோமே..

தமிழும், இசையும் கலந்து இறைவனை ஆராதிப்பதற்கு உகந்த மாதமாக மார்கழி மாதம் சைவர், வைணவர் இருவராலும் பல நூற்றாண்டுகளாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மார்கழி மாதத்தில் தான் கிருஷ்ணரால் அருளப்பட்டது என்பது நம்பிக்கை. மேலும் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளதால், இறை வழிபாட்டிற்காகவே மார்கழியை கடைபிடிப்பது பாரம்பரியம்.

பெண்கள் பாவை நோன்பு இருப்பதும், ஆண்கள் அதிகாலைகளில் பஜனை எனப்படும் பக்திப் பாடல்களை இசைப்பதிலும் ஈடுபடுவது வழக்கம். குறிப்பாக மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை ஆகியவை அதிகம் பாடப்படும். இந்த மாதம் இசை மார்கழி என்றே அழைக்கப்படுகிறது.

கோவில்கள் சார்ந்தே முழங்கிவந்த மார்கழி இசையை, நகரம் முழுவதும் நடக்கும் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட இசை விழாவாக மாற்றிய பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும். 1927-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு சென்னையில் நடந்தது. அந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய இசை வடிவங்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் இசை விழா நடத்தப்பட்டது. அந்த விழாதான் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து சென்னை இசை சீசன் என்று உலகப் புகழ் பெற்றது. அது மட்டுமல்ல அந்த காங்கிரஸ் மாநாட்டு கலை நிகழ்வுகளில் ஒன்றாக, தென்னிந்திய இசை வடிவங்களை அடுத்த தலைமுறைகளுக்கு போதிக்கும் இசைப் பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டது. அது தான் இன்றளவும் சென்னையை இசை உலகின் மையமாக உயர்த்திப் பிடித்திருக்கும் MUSIC ACADEMY.

சென்னை இசை சீசனுக்கு இது 90-வது ஆண்டு. ஒரு சில இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட விழாவாக தொடங்கியதுதான், இன்று 25 நாட்களில் 40-க்கும் மேற்ப்பட்ட சபாக்களால், 3000-க்கும் அதிகமான கச்சேரிகள் நடக்கும் சென்னை இசை சீசனாக விஸ்வரூபமெடுத்துள்ளது. நகரம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் இந்த சீசனைப் போன்ற விழா உலகில் வேறு எந்த நகரத்திலும் நடப்பதில்லை என்ற பெருமை சென்னைக்கு உண்டு.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close