[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

பூமியின் எல்லையை தொட்டவர்களை சிறப்பித்த கூகுள் டூடுள்...!

today-google-togel-news

பூமியின் எல்லையான தென்துருவத்தில் மனிதன் முதன்முதலில் கால்வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினை கூகுள் நிறுவனம் டூடுள் மூலம் சிறப்பித்துள்ளது. 

மனிதர்கள் வாழமுடியாத அளவு உறைபனிசூழ் கண்டமான அண்டார்டிகாவில்தான் பூமியின் தென்துருவம் அமைந்துள்ளது. பூமியில் மிக குளிர்ந்த பகுதியான இப்பகுதியை ‘நோ மேன்ஸ் லாண்ட்’ (No Man’s Land) என்று அழைக்கின்றனர். 98 சதவீதம் பனிப்பாறைகளால் இக்கண்டம் முழுவதும் பனிக்கட்டியால் மூடப்பட்டு உள்ளது. புவியியல் தென் துருவமான அந்த அதிசய உலகை முதன் முதலாக நார்வே நாட்டைச் சேர்ந்த அமுன்ட்சென் என்பவர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு 1911ஆம் ஆண்டு டிசம்பர் 14-ல் அடைந்தது. இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதன் மூலம் பூமியின் எல்லையை தொட்டவர் என்ற பெருமையை அமுன்ட்சென் பெற்றார். அங்கு மூன்று நாட்கள் தங்கிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு பின் டிசம்பர் 17ஆம் தேதி அவர் நாடு திரும்பினர். அவருடைய இந்த வீர பயணத்தை போற்றும் வகையில் கூகுள் நிறுவனம் இன்று டூடுள் மூலம் சிறப்பித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close