[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

’கடலைக்காக்கும் ராஜா’.. இந்திய கப்பற்படை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

navy-day

உலகில் 7ஆவது மிகப்பெரிய கப்பற்படையாக இந்திய கப்பற்படை திகழ்கிறது. நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பது, போரின்போது பதில்தாக்குதல் நடத்துவது, பேரழிவுகளின்போது மீட்புப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கப்பற்படை செய்து வருகிறது.நாட்டின் 45ஆவது தேசிய கப்பற்படை தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ராயல் இந்திய கப்பற்படை:

வணிகம் புரியவந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனியால் 1612-ல் ராயல் இந்தியன் நேவி என்ற பெயரில் கப்பற்படை தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ல் இந்திய கப்பற்படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கப்பற்படை தினம்:

கப்பற்படை தினம் கொண்டாடப்படுவதின் சுவாரஸ்ய பின்னணி என்னவென்றால், கப்பற்படை தோற்றுவிக்கப்பட்ட தினத்தை இந்தியா கொண்டாடுவதில்லை. ஆனால், கடந்த 1971-ல் ஆபரேஷன் டிரிடெண்ட் என்ற பெயரில் கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கப்பற்படை தலைமையக முற்றுகை வெற்றிபெற்ற தினத்தையே கப்பற்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கப்பற்படையின் பலம்:

உலகின் 7ஆவது மிகப்பெரிய கப்பற்படையாகக் கருதப்படும் இந்திய கப்பற்படையில் 2016ம் ஆண்டு நிலவரப்படி, 58,000-த்துக்கும் அதிகமான வீரர்கள் பணிபுரிகின்றனர். 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், 10 போர்க்கப்பல்கள், ஒரு அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல், 47 ரோந்து கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு கப்பல்கள் உள்ளன.

முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்:

ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பலே இந்திய கப்பற்படையின் முதல் விமானம் தாங்கிக் கப்பலாகும். உலகின் பழமையான விமானம் தாங்கி போர்க்கப்பலும் இதுவே. இதையடுத்து ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பற்படையின் 2ஆவது விமானம் தாங்கி போர்க்கப்பலாக கப்பற்படையில் இணைந்தது. இது முழுக்கமுழுக்க உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டதாகும்.

முதல் கண்டம்விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையுடன் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்:

ஆறாயிரம் டன் எடை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த், இந்திய கப்பற்படையின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையுடன் கூடிய நீர்மூழ்கிக் கப்பலாகும். ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள 5 நாடுகளைத் தவிர, வேறு ஒரு நாடு உருவாக்கிய முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையுடன் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் என்ற பெருமையும் இந்த கப்பலுக்கு உண்டு.

கப்பற்படையின் பெருமை:

உலக அளவில் மூன்று நாடுகளின் கப்பற்படைகள் மட்டுமே விமான சாகசங்களை நிகழ்த்தும் அணிகளைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்திய கப்பற்படையின் சாகர் பவன்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close