[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

போலியோ பாதித்தபோதும் சதுரங்கத்தில் சாதனை படைத்து வரும் ஜெனிட்டா..!

polio-affected-girl-got-chess-champion

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகைளை பேசும் முன்பாக, அவர்களின் சாதனைகளை பார்க்கலாம்.

பல சிரமங்களை கடந்து சிகரம் தொட்ட ஒரு மாற்றுத்திறனாளி பெண் சிகரம் தொட்ட போராட்டட கதையை முதலில் பார்ப்போம். இவர். உலக மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டியில் தொடர்ச்சியாக கடந்த 4 ஆண்டுகளாக தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தங்க மங்கை ஜெனிட்டா.

ஜெனி‌ட்டா ஆண்டோ, செஸ் சாம்பியன் போலியோ நோய் தாக்கியபோது ஜெனிட்டா ஆண்டோவுக்கு வயது 3. இரண்டு கால்களும் ஒரு கையும் முற்றிலும் செயல் இழந்த நிலையில் உள்ள ஜெனிட்டாவுக்கு சதுரங்க ஆர்வத்தை ஏற்படுத்தி ஊக்குவித்தவர் அவரது தந்தை காணிக்கை இருதய ராஜ் அதன் பின்பு ஜெனிட்டாவுக்கு சதுரங்கமே வாழ்க்கையாகி போனது. தற்போது 29 வயதாகும் ஜெனிட்டா, மாவட்ட, மாநில அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் நூற்றுக்கணக்கான பதக்கங்களை வெற்றுள்ளார்.

70 வயதாகும் ஜெனிட்டாவின் தந்தை அவரை இன்றும் தூக்கிச் சென்றே போட்டிகளில் பங்கெடுக்க வைக்கிறார். கடந்த ஆண்டு வாடிகன் நகரில் ஜெனிட்டா பேசிய ரேடியோ பேச்சை கேட்டு அவருக்கு ஜெர்மனியை சேர்ந்த தன்னார்வலர் சக்கர நாற்காலியை பரிசளித்துள்ளார். இந்த நாற்காலி தற்போது தந்தையின் சிரமத்தை குறைக்க உதவுவதாக கூறுகிறார். எனினும் போட்டி இடங்களுக்கு போகும்போது தந்தையின் உதவி தேவைப்படுவதாக கூறுகிறார் இவர்

படிகள் இல்லாத தரைத்தளங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளை நடத்துவது, அருகிலேயே கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தருவது என தங்கள் பிரச்சனைகளை உணர்ந்து வெளிநாடுகளை போல் சில வசதிகள் தேவை எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close