[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்...!

international-disability-day

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3- ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

மனதில் ஊனத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் ஊனம் உடம்பில் இல்லை என தைரியமாக வாழ்ந்துவரும் பல மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை ஒரு மூலையில் அமர வைத்த காலம்போய், இன்று அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் (Visually challenged person) என்ற பெயரிட்டு அழைப்பது பெருமைக்குரிய விஷயமே.!

ஐக்கிய நாடுகள் சபை 1981 ஆம் ஆண்டை உலக ஊனமுற்றோர் ஆண்டாக முதன் முதலில் அறிவித்தது. அதன் பின்னர் 1982 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 3 ஆம் நாளை அனைத்துலக ஊனமுற்றோர் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் என அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஊனம் என்பது உடலின் பிழை உள்ளத்தில் அல்ல என வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்து வரும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க அரசு பல நல உதவிகளையும், பல போட்டிகளையும் நடத்தி வருகிறது. உடலில் மட்டுமின்றி வாழ்விலும் எல்லாத் தடைகளையும் வலியோடும் வலிமையோடும் எதிர்கொண்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளையும் வழங்க வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close