[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

ஹெச்.ஐ.வி- க்கான தடுப்பூசி சோதனை.... வெற்றியில் முடியுமா..?

hiv-vaccine-test-starts-in-south-africa

தொடர்ந்து ஏழு ஆண்டு கால ஆராய்ச்சிக்கு பின் ஹெச்.ஐ.விக்கான தடுப்பூசி சோதனையை தென்னாப்பிரிக்காவில் உள்ள அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் கழகம் (NIAID) தொடங்கியுள்ளது.

இதுவரை பல ஆராய்ச்சிகள் ஹெச்.ஐ.வி- க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது. தற்போது, ஹெச்.ஐ.வி வைரசுக்கு எதிராக ‘HVTN 702’ எனப்படும் தடுப்பூசிக்கான ஆய்வு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதன்படி, 18 முதல் 35 வயதிற்குட்பட்ட சுமார் 5400 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு போடப்பட்டு, கிடைக்கும் முடிவுகள் மூலம் ஆராய்ச்சி செய்யவுள்ளது. இந்த தடுப்பூசியானது ஹெச்.ஐ.வி வைரசிலிருந்து மனிதனை பாதுகாக்கும் என்பது உறுதி செய்யப்பட்டால், இன்னும் சில ஆண்டுகளில் எய்ட்ஸ் நோய் இல்லாத உலகை உருவாக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ‘HVTN 702’ என்ற தடுப்பூசியை சாஸ்நோஃபி மற்றும் கிளாக்சோசிமித் என்ற ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசி சோதனையை அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் கழகம் (NIAID) நடத்தவுள்ளது. முதன்முதலில் ‘HVTN 702’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு சோதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்காவில் இந்த சோதனை நடத்தப்படவுள்ளது. இந்த சோதனைக்காக பயன்படுத்தப்படும் நபர்களுக்கு ஆண்டுக்கு ஒரு தடுப்பூசி வீதம் மொத்தம் ஐந்து ஊசிகள் போடப்படும். இதன் இறுதி முடிவுகளானது வரும் 2020-ஆம் ஆண்டு வெளியாகும்.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ஜிலென்டா கிரே கூறுகையில், ‘எச்.ஐ.வி ஒவ்வொரு நாளும் 1,000- க்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு எச்.ஐ.வி/ எய்ட்ஸ்- க்கு சுமார் 36.7 மில்லியன் மக்கள் பாதிப்படைகின்றனர். அதில் 1 மில்லியன் பேர் இறந்துவிடுவதாக கூறியுள்ளார். மேலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஹெச்.ஐ.வி எனும் கொடிய வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் போராட்டத்தில் இந்த ஆராய்ச்சி ஒரு மைல்கல்லாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close