[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ஏகாதிபத்தியத்தின் தனிப்பெரும் எதிரி ’பிடல் காஸ்ட்ரோ’.. அறிந்ததும், அறியாததும்

the-10-things-you-did-not-know-about-fidel-castro

ஏகாதிபத்தியத்தின் தனிப்பெரும் எதிரியாக வரலாறு பதிவு செய்த கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நிரந்தர துயிலில் ஆழ்ந்தார்.

* பிடல் காஸ்ட்ரோவின் அடையாளங்களும் ஒன்றாக மாறிப்போன தாடி குறித்து அவர் அளித்த விளக்கம் சுவாரஸ்யமானது. தாடிக்கு தினமும் நேரம் ஒதுக்காததால் ஆண்டுக்கு 5,000 நிமிடங்கள் தனக்கு மிச்சமாவதாக பிடல் குறிப்பிட்டார். ஷேவிங் செய்யும் ரேசரில் விஷம் வைத்து அவரைக் கொலை செய்ய முயற்சி நடக்கலாம் என்பதாலேயே அதை பிடல் தவிர்த்து வந்தார் என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது.

* நகரங்களில் வசிப்பதை விட கிராமப்புறங்களில் இருப்பதையே அதிகம் விரும்பிய பிடலின் தந்தை வேலைக்காக இடம் பெயர்ந்தவர். ஆனால், பிடலின் தலைமுறையில் அவரது குடும்பத்துக்கு சொந்தமாக கரும்பு தோட்டமும், சர்க்கரை ஆலையும் இருந்தன.

* கியூபா வரலாற்றில் சிறந்த பள்ளிக்கால தடகள வீரராக அறியப்பட்ட பிடலுக்கு, சில அமெரிக்க கூடைப்பந்து அணிகள் வாய்ப்பு அளித்ததாகவும், அதனை ஏற்க மறுத்து விட்டார் என்றும் ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு கருத்து உலவுகிறது. ஆனால், இந்த கருத்துக்கு வலுச்சேர்க்கும் எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை.

* கியூப விடுதலையின் தூதராக அறியப்படும் ஜோஸ் மார்டி பெரெஸின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோ, அவருக்கு அடுத்த இடத்தில் தான் இருப்பதாகவே நம்பினார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

* இரவு நேரங்களில் பணிபுரிவதை விரும்பும் பிடலின் வேலை சிலநாட்கள் அதிகாலை 3, 4 மணி வரை நீள்வதுண்டு. குறிப்பாக முக்கியமான சந்திப்புகளை நள்ளிரவு வேளைகளில் நடத்துவது பிடலின் ஸ்டைல். அதேபோல, பத்திரிகையாளர்களுக்கு நேர்காணல் அளிப்பதை அதிகம் விரும்பாதவர் பிடல்.

* கடந்த 1955-ல் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை மெக்சிகோவில் சந்தித்த பிடல், அவர் தன்னை விட தொலைநோக்கு பார்வை கொண்ட சிறந்த சிந்தனையாளர் என்று பாராட்டினார். பின்னாட்களில் பிடலின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட சேகுவரா தான் அந்த மருத்துவர். இருவரிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், சேகுவரா மீதான நட்பும், நம்பிக்கையையும் பிடல் என்றுமே குறைத்துக் கொண்டதில்லை.

* வெறித்தனமான வாசிப்பாளராகக் கருதப்படும் பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்கேவின் தீவிர ரசிகர். அவர் எழுதிய’ ஃபார் ஹூம் தி பெல் டால்ஸ்’ (For Whom the Bell Tolls) எனும் நாவல் பிடலின் மனதுக்கு நெருக்கமானது என்று சொல்லப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோ எழுத்தாளராக முயற்சித்ததாகவும் ஒரு தகவல் உண்டு.

* பிடலின் வாசிப்பில் சமையல் குறிப்பு புத்தகங்களும் அடங்கும். அதிலும் குறிப்பாக சில ரெசிப்பிகளை தனது வீட்டு சமையலறையில் தானே கைப்பட செய்து பார்ப்பதில் அலாதி சுகம். மேலும், சமையல் கலைஞர்களுடன் மணிக்கணக்கில் விவாதிக்கும் பழக்கம் கொண்டவர்.

* நீண்ட நேரம் பேசும் அசாத்திய திறமை பெற்ற பிடல் காஸ்ட்ரோ, அந்த உரைக்காக எந்த ஒரு புத்தகமோ, குறிப்புகளையே எடுத்துக் கொள்ள மாட்டார். ஐக்கிய நாடுகள் அவையில் மிக நீண்ட உரையை ஆற்றியவர் என்ற பெருமை பிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. ஐ.நா.வில் அவர் ஆற்றிய உரை 4 மணி நேரங்களுக்கு மேல் நீடித்தது.

* ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவராக வளர்ந்த பிடலின் மத நம்பிக்கைகள் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. நாத்திராக அறியப்பட்ட பிடல், கிறிஸ்தவ மதத்தில் சில நல்ல கருத்துகளும் இருப்பதாக நம்பியதாகக் கூறப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை நல்ல கம்யூனிஸவாதி என்றும் பிடல் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close