[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

வெண்மை புரட்சிக்கு வித்திட்ட வர்கீஸ் குரியன்.. தேசிய பால் தின சிறப்பு பகிர்வு

national-milk-day

வெண்மை புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியனின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 26ம் தேதி தேசிய பால் தினம் கொண்டாடப்படுகிறது.

சுதந்திரத்துக்கு சிறிது காலத்திற்கு முன்னர், அதாவது 1940களில் பால் வளத்தை அதிகரிக்க வேண்டும் என வர்கீஸ் குரியனால் தொடங்கப்பட்டதே வெண்மை புரட்சியாகும்.1921ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கோழிகோட்டில் பிறந்தவர் வர்கீஸ் குரியன். தன்னுடைய 29வது வயதில் குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற கிராமத்திற்கு சென்றார். பால் பற்றாக்குறையை போக்குவதற்காக அந்த கிராமத்தினரை ஒன்றிணைத்து பல கூட்டுறவு சங்கங்களைத் துவங்கினார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியை அதிகரித்ததுடன், பால் உற்பத்தியில் உலகின் இரண்டாம் பெரிய நாடாக இந்தியா உருவாக முக்கிய காரணமாக அவர் அமைந்தார். இந்த சாதனையால் இந்திய வெண்மை புரட்சியின் தந்தை என குரியனுக்கு அடைமொழியோடு விளிக்கப்பட்டார். இவருடைய பிறந்த தினமான நவம்பர் 26ம் தேதியே ஆண்டுதோறும் தேசிய பால் தினமாக கொண்டாடிவருகிறோம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close