[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

இன்று உலக மீனவர்கள் தினம்

worldfisheriesday

மீனவர்களின் வாழ்வு செழிக்க உலகம் முழுவதும் உள்ள மீனவ மக்களால் நவம்பர் மாதம் 21- ஆம் தேதி ‘உலக மீனவர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

மீனவர்கள் தொழிலுக்கு செல்லும் போது நடுகடலில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர் அதற்கு தீர்வு காணும் வகையில் சுமார் 40 நாடுகளின் பிரதிநிதிகள் 1997- ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி டெல்லியில் உலக மீன் தொழிலாளர் பேரவையை உருவாக்கினர். இந்நாளில் மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தி ஆலயங்களில் வழிபாடு செய்கின்றனர்.

குறிப்பாக, தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்துவது, பறிமுதல் செய்வது, மீனவர்களை துன்புறுத்துவது, அச்சுறுத்துவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்ற அத்துமீறல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close