[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

டிசம்பர் 1ம் தேதி சம்பளம் கிரெடிட் ஆவதில் சிக்கல் ஏற்படுமா..?!

salary-will-recevied-or-not

நாடு முழுவதும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். அதைத்தொடர்ந்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் கடந்த 10-ஆம் தேதி முதல் வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றியும்,டெபாசிட் செய்தும் வருகின்றனர். இதனிடையே மை வைத்து பணம் வழங்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் பொதுமக்களுக்கு கை விரலில் மை வைக்கப்பட்டு வருகிறது. பணம் மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் இது எப்போது தணியும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்னும் சில நாட்களில் ஊழியர்களின் மாத சம்பளத்திற்கான வேலைகள் தொடங்கிவிடும். இந்நிலையில், வங்கி ஊழியர்களுக்கு வேலை சுமை அதிகரித்துள்ளதாகவும், வங்கிகளில் பண இருப்பு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதிலும், வரவு வைப்பதிலும் ஏற்கனவே வங்கி ஊழியர்கள் மிகுந்த பணிச்சுமையோடு விழி பிதுங்கி நிற்கும் நேரத்தில், கூடுதலாக வங்கிகளில் இந்த மாதத்திற்கான சம்பளத்தை கணக்கில் வைக்கும் பணியும் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 1ம் தேதியன்று சம்பளம் வழக்கம்போல கிடைக்குமா என்ற பயம் ஏற்பட்டுள்ளது. பணப்பரிமாற்றம் எவ்வாறு நடைபெறும், பணத்தட்டுப்பாடு குறையுமா..? குறிப்பிட்ட தேதிகளில் பணம் கிடைக்குமா..? என்ற பல்வேறு கேள்விகள் மாத சம்பளம் வாங்குவோர் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை சம்பளம் தாமதமானால் பெரும்பாலான ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் 2ம் தேதி இ.எம்.ஐ செலுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்த முடியாமல் போனால் வங்கிகள் அவர்களுக்கு அபராதம் விதிக்கும். இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்றும் பெரும்பாலானோர் கலக்கமடைந்துள்ளனர்.

மத்திய அரசின் செல்லாக்காசு அறிவிப்பிற்குப் பிறகு தினக்கூலி தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close