500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதையடுத்து மொபைல் பேங்கிங் சேவை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
மொபைல் பேங்கிங் சேவை பணப்பரிவர்த்தனை செய்ய மிகவும் உதவியாக உள்ளது. இச்சேவையை மொபைல் போன் மூலம் மட்டுமே செய்ய முடியும். நாம் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கி எந்தெந்த வங்கியுடன் ஐஎம்பிஎஸ் செய்ய கூட்டு வைத்துள்ளதோ அந்த வங்கிகள் மூலம் மட்டும் தான் இந்த சேவையை பெற முடியும்.
இந்நிலையில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் அஞ்சலங்களில் வழங்கப்பட்டு வருகிறது. புதிய ரூபாய் நோட்டுகளை பெற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தற்போது நிலவி வருகிறது.
புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பணப் பரிவர்த்தனைக்கான மாற்று வழிகளான கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, மொபைல் வங்கி, இணைய வங்கி போன்ற சேவைகளை பயன்படுத்தி வங்கி சேவை அல்லாத கிராம பஞ்சாயத்துகளில் கூட இந்த மொபைல் வங்கி சேவை உதவியாக உள்ளது.
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூன்று வழிகளில் பணப்பரிமாற்றங்களுக்கு உதவுகிறது. ஆன்லைன் பரிவர்த்தனை, ஏடிஎம் மூலம் பணம் பெறுதல், பிஓஎஸ்மூலம் கார்டுகள் உபயோகப்படுத்துதல் போன்ற பல வழிகளில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது.
ரிசர்வ் வங்கி தரவு படி, ஜூலை மாத இறுதியில் 1.44 மில்லியன் பிஓஎஸ் டெர்மினல்கள் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியானது. இதில் 1.44 லட்சம் பிஓஎஸ் டெர்மினல்கள், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவற்றின் செயல்பாடுகள் ஆகும்.
ஒரு வங்கி கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை தான் எடுக்க முடியும் என்ற வரம்புகளுக்கு விதிவிலக்காக மொபைல் வங்கி சேவை உள்ளது. ஏனெனில் ஒருவருடைய வங்கி கணக்கிலிருந்து மற்றொருவர் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி பின் அப்பணத்தை எடுக்க மொபைல் வங்கி உதவுகிறது.
மொபைல் வங்கி சேவையை தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் நடைமுறையில் செயல்படுத்துகிறது. இன்றைய உலகில் எங்கிருந்து வேணாலும் பணத்தை எளிதாக மொபைல் வங்கி மூலம் அனுப்ப முடியும். மேலும் இந்த சேவைக்கு எந்த கூடுதல் கட்டணமோ அல்லது பணப் பரிவர்த்தனை வரம்புகளோ கிடையாது.
இத்தகைய பிளாஸ்டிக் மணி பயன்பாட்டினால் கறுப்புப்பணத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும். மொபைல் வங்கி மற்றும் இணையதள வங்கி செயல்பாட்டினால் பணம் கைக்கு வராமல் தடுக்கப்படுகிறது. எனவே கணக்கில் வராத பணம் என்பது முற்றிலும் ஒழிக்கப்படுகிறது. இதன் மூலம் நம்முடைய பணப்பரிமாற்றம் விவரங்கள் நமக்கும் வங்கிக்கும் மட்டுமே முறைப்படி தெரிகிறது இதனால் கணக்கில் வராத பணம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை.
மொபைல் வங்கி மூலம் பலர் அவர்களது வரி, மின்சார கட்டணம், வங்கி கடனின் மாத தவணை போன்ற பலவற்றை எளிதாக செலுத்த முடிகிறது. தற்போதைய நிலைமையில் பல இளைஞர்கள் மொபைல் வங்கி சேவையை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
பொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா
இது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி?