[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தான்: லாகூரில் நடந்த குண்டு வெடிப்பில் 8பேர் உயிரிழப்பு - 30பேர் படுகாயம்
  • BREAKING-NEWS டெல்லி லோக் நாயக் பவனில் அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து
  • BREAKING-NEWS இந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
  • BREAKING-NEWS ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்- 35 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காங்கிரஸ் போராட்டம்: மல்லிகார்ஜூன் கார்கே
  • BREAKING-NEWS மாணவர்களுக்கு கல்லூரிகளில் டிரைவிங் லைசன்ஸ்!
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்
  • BREAKING-NEWS கோவை ஈஷா யோகா மையத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலி மாசு: தமிழக அரசு
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு: அமைச்சர்
  • BREAKING-NEWS மதுரையில் 2 நகைக் கடைகளின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை
சிறப்புக் கட்டுரைகள் 14 Nov, 2016 02:05 PM

குழந்தைகளை மகிழ்விக்க ஓர் தினம்.... சிறப்பு தொகுப்பு..!

children-s-day-special-artical

குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14- ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் நவம்பர் 20-ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உலகிலேயே, அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

குழந்தைகள் தின விழா என்றால், பள்ளிகளில் கொண்டாட்டம் தான். அன்றைய தினத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு, பேச்சு, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளின் நல்வாழ்வுகாக பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்ட போதிலும், அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து சத்துக் குறைபாட்டால் பாதிப்படைந்து இறக்கும் அவலநிலையும் நாட்டில் உள்ளது. மேலும் இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அடிப்படை கல்வி பெற்று குழந்தைகள் முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெறவேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக உள்ளது.

Advertisement:
Advertisement:
[X] Close