[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் நீடிக்கிறது வன்முறை
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

இன்று சர்வதேச சர்க்கரை நோய் ஒழிப்பு தினம்..!

today-world-diabetes-day

சர்வதேச சர்க்கரை நோய் ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் இந்த விஷநோய் இந்தியாவில் ‌இளைஞர்கள் மத்தியில் வேகமாக அதிகரித்து வருவதாக அதிர்‌ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. சர்க்கரை நோய் தொடர்பான தேசிய பதிவேட்டின்படி இத்தகவல் தெரியவந்துள்ளது.

ஆரோக்கியமற்ற நவீன வாழ்க்கை முறை காரணமாக இன்று குழந்தைகளும், இளவயதினரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோய் வகை ஒன்று, வகை இரண்டு என்று இரண்டு வகைப்படும். தீவிர பாதிப்புகளை தரும் இரண்டாவது வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் 25 வயதுக்கு கீழான இளைஞர்கள் என்றும் அதில் தெரியவந்துள்ளது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் இளைஞர்கள் எ‌ண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரி‌வித்துள்ளனர். சிறார் பருவத்தில் உடல் பருமன் பிரச்‌னை அதிகரித்துக் காணப்படுவது சர்க‌கரை நோய் ஆபத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் இயலாமை, இளவயது மரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

ஆரோக்கியமான உணவு மற்றும் உணவு பழக்கம், முக்கியமாக காலை உணவை தவறாமல் சாப்பிடுவதே சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க சிறந்த வழியாகும். நார்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள், பயிறுகள் சர்க்கரையை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் 45 நிமிட நடைபயிற்சி அவசியமாக மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை மீது அதிக அக்கரை கொண்டு விழிப்புணர்வு பெற்று வாழ வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசித்தல், அதிக தாகம், எப்போதும் களைப்பாக இருத்தல், ஆறாத புண், திடீர் எடை குறைதல், இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு, மிகக் கூடுதல் எடை, கால் மரத்துப் போதல், மங்கலான பார்வை ஆகியவையே சர்க்கரை நோயின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.

சர்க்கரை நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால், நோயின் தாக்குதலில் இருந்து விடுபடலாம். மேலும் காசநோய், எச்ஐவி நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்த அளவுக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close