[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

நவீன இந்தியாவின் சிற்பி 'பண்டித ஜவஹர்லால் நேரு' பிறந்த தினம் இன்று

today-pandit-jawaharlalnehru-birthday

இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமைகளுக்கு சொந்தகாரரான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஜவஹர்லால் நேரு 1889- ஆம் ஆண்டு, நவம்பர் 14 ஆம் தேதி அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூப ராணி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நேரு, தன்னுடைய 13 ஆம் வயதில் அன்னிபெசன்ட் அம்மையாரின் ‘பிரம்ம ஞான சபை’ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கல்வி மட்டுமின்றி, குதிரை ஏற்றப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, பனிச்சறுக்கு விளையாட்டு ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர் நேரு..! ஜவஹர்லால் நேரு, ஹார்ரோவில் பள்ளி வாழ்க்கையை முடித்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை 1907ல் எழுதி, ட்ரினிடி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். அவர்களது நண்பர்கள் கல்லூரியில் அவரை ‘ஜோ’ என்றே அழைப்பர். நேரு 1910 ஆம் ஆண்டு இயற்கை அறிவியலில் ‘ஹானர்ஸ் பட்டம்’ பெற்றார். அதன்பின், கமலா கவுல் என்ற பெண்ணை, 1916 பிப்ரவரி 7ல் மணந்தார்.

‘நேர்மையாக வராத எந்தப் பொருளையும் நமக்கானது ஆக்கிக்கொள்ளக் கூடாது!’ என்பது நேருவின் முக்கிய கொள்கை. இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952ல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார்.

‘இந்தியவாவுக்குச் சேவை செய்வது என்பது, துன்பப்படும் கோடிக் கணக்கான மக்களுக்குச் சேவை செய்வதாகும். கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்வது என்பது இல்லமை, ஏழ்மை, அறியாமை, பிணித் துன்பம் ஆகியவற்றிலிருந்து அவர்களுக்கு விடுதலை அளிப்பது. எல்லார்க்கும் சமவாய்ப்பு அளிப்பது என்பதாகும்’ இதுவே ஜவஹர்லால் நேருவின் பொன்மொழி ஆகும்.

நேருவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக் கூடமாகிய தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடமும், அதைத் தொடர்ந்து மேலும் 17 தேசிய ஆய்வுக் கூடங்களும் ஏற்படுத்தப்பட்டன. நேரு இந்திய வெளியுறவுக் கொள்கையின் சிற்பி எனப் போற்றப்படுகிறார். இந்திய & சீன உறவைப் பேணுவதிலும், அண்டை நாடுகளோடு நட்புறவை நிலைநிறுத்துவதிலும் முயற்சிகளை மேற்கொண்டார்.

குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவர். உலகப்போர் சமயத்தில் பெரும்பாலான விலங்குகளை இழந்த யூனோ விலங்கியல் பூங்காவிற்கு ஜப்பான் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக ஒரு யானைக் குட்டியை பரிசாக அளித்தார்.

நேரு தன் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் அவரின் பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியக் குழந்தைகள் அவரை ‘சாச்சா நேரு’ (மாமா நேரு) என்றே செல்லமாக அழைப்பர்.

அப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி காலமானார். அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close