[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

சருமத்தைப் பொலிவுபடுத்தும் பாதாம் எண்ணெய்...

badam-oil-usage-for-health-and-beauty

பாதாம் எண்ணெயை சூப்பர் மார்க்கெட்களில் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால், அதனை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்பது குறித்து நம்மில் பலருக்கும் குழப்பங்கள் இருக்கவே செய்கின்றன. பாதாம் எண்ணெயின் குணங்கள் என்னென்ன என்பதனை முதலில் தெரிந்துக்கொள்வோம். பின்னர் அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என பார்க்கலாம். பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ, மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் எனப்படும் நல்ல கொழுப்பு, புரதம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் அடங்கியுள்ளன. இதனால் பாதாமை அப்படியே சாப்பிடுவதால் பல நன்மைகளை நம்மால் பெற முடியும். அது மட்டுமின்றி பாதாம் எண்ணெயை அன்றாடம் பயன்படுத்துனால் கூடுதலாக பலவிதமான பயன்கள் நமக்கு கிடைக்கும்.

பாதாம் எண்ணெயை பொறுத்த வரை அப்படியே உட்கொள்ளவும் செய்யலாம் அல்லது அன்றாடம் சமைப்பதற்கும் பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெய்யை சருமத்தையும் கூந்தலையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியாமாக வைப்பதற்கும் அப்படியே தடவி பயன்படுத்தலாம். அதில் சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

*ஸ்கின் மாய்ச்சுரைசர்: குளித்து முடித்ததும் பெரும்பாலானோர் மாய்ச்சுரைசர் கிரீம்களை பயன்படுத்துவோம். பல கெமிக்கல்கள் அடங்கிய காஸ்ட்லி கிரீம்களுக்கு மாற்றாக பாதாம் எண்ணெய் சில துளிகளை உள்ளங்கையில் விட்டு தேய்த்து பின் முகத்தில் ஒத்தி எடுக்கலாம். நாள் முழுக்க நம்முடைய சருமம் உலர்து போகாமல் ஃப்ரஷ்ஷாக இருக்கும்.

*மேக் அப் ரிமூவர்: மேக் அப் ரிமூவர்க்கு பதில் பாதாம் எண்ணெய்யை காட்டன் பால்களில் முக்கி பின்னர் முகத்தில் தேய்த்து மேக்அப்பை நூறு சதவீதம் பக்கவிளைவின்றி நீக்கிவிடலாம்.

*பெட் டைம் லோஷன்: இரவு தூங்குவதற்கு முன் சிறிது பாதாம் எண்ணெய் எடுத்து முகத்திலும் கை மற்றும் பாதங்களிலும் தடவி வர சருமம் பளபளப்பாகும்.

*டீப் கண்டிஷனிங் ட்ரீட்மெண்ட்: பாதாம் எண்ணெயை லேசாக சூடேற்றி பருத்தி பஞ்சில் முக்கி முடியின் வேர்களில் தடவ வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் தலைக்கு குளித்தால், கூந்தல் பளபளப்புடன் இருப்பதோடு கண்டிஷனாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பாதாம் எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தொற்றுகள் பலவற்றிலிருந்தும் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அழகும் என்பது வெளிப்புறத்தோற்றம் மட்டுமல்ல ஆரோக்கியத்துடனும், வலுவுடனும் இருப்பதுதான். ஆகவே இனி அன்றாடம் பாதாம் எண்ணெயை பயன்படுத்தி ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகள்...!

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close