[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

புற்றுநோய்காக ஓர் மாதம்.. 'நோ ஷேவ் நவம்பர்'...!

no-shave-november

பல நவம்பர் மாதங்களை கடந்து வந்திருப்போம். ஆனால் தற்போது சில ஆண்டுகளாக நவம்பர் மாதம், ஆண்களால் ‘நோ ஷேவ் நவம்பர்’ என்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எதற்காக இதை கடைபிடிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வோமா..?

புற்றுநோயால் பாதிக்கப்படுவர்கள் இழக்கும் முடியை, அவர்களுக்காக நாம் வளர்ப்பது என்பதே ‘நோ ஷேவ் நவம்பர்’ என்பதின் மையக் கரு. பலரும் நினைப்பதைப் போல ‘நோ ஷேவ் நவம்பர்’ என்பது, ஆண்கள் ஸ்டைலாக தாடி வளர்த்து ரசித்துக் கொள்வதற்காகவும், பலரை தன் வசம் ஈர்ப்பதற்காகவும் அல்ல. புற்றுநோய்குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது தான் இதன் குறிக்கோள்.

பொதுவாக புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சையின் போது முடியை இழக்கின்றனர். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆண்கள் கட்டிங், ஷேவிங்கிற்கு ஒருமாதம் முழுக்கப் பயன்படுத்தும் தொகையை சேமித்து வைத்து புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களுக்கு நன்கொடையாக அளிப்பதற்கும் தான் இந்த 'நோ ஷேவ் நவம்பர்' கடைபிடிக்கப்படுகிறது.

மேத்யூ ஹில் என்பவர் ‘காலன் கேன்சரால்’ (colon cancer) பாதிக்கப்பட்டு 2007-ம் ஆண்டு இறந்துவிட, 2009-ம் ஆண்டு அவரது மூத்த மகளான ரெபெக்கா ஹில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இதன் மூலம் அந்நிறுவனம் கடந்தாண்டு திரட்டிய தொகை ஒரு மில்லியன் டாலர்...! இந்த வருடம் நிறுவனம் எவ்வளவு நிதி திரட்டும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதன் உண்மை புரியாத பலர் விளையாட்டாக ஹேஷ்டேக்கோடு போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து மகிழ்கிறார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close