[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

உலகின் டாப் 5 அதிவேக ரயில்களின் விவரங்கள்...

top-5-high-speed-trains-in-the-world

1. ஷாங்காய் மாக்லேவ்

சீனாவில் இயக்கப்படும் ‘ஷாங்காய் மாக்லேவ்’ ரயில் மணிக்கு 430 கிமீ வேகம் வரை தொடக்கூடியது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக சராசரியாக மணிக்கு 267 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது.

2. ஹார்மோனி சிஆர்எச்380ஏ

உலகிலேயே அதிக தூரத்துக்கு புல்லட் ரயில் சேவையை அளிக்கும் நாடு சீனாதான். அங்கு இயக்கப்படும் 50 சதவீத ரயில்கள் புல்லட் ரயில்களாக இருக்கின்றன. இந்த நிலையில், சீனாவின் ஹார்மோனி சிஆர்எச்380ஏ என்ற புல்லட் ரயில் சோதனை ஓட்டத்தின்போது, மணிக்கு 416.6 கிமீ வேகத்தை தொட்டு சாதனை படைத்தது. ஆனால், தற்போது மணிக்கு சராசரியாக 380 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது.

3. ஜெர்மனி- டிஆர்-09

ஜெர்மனியில் இயக்கப்படும் டிரான்ஸ்ரேபிட் எனப்படும் டிஆர்-09 மோனோரயில் அதிவேக ரயிலாக இருக்கிறது. மணிக்கு 500 கிமீ வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும். ஆனால், பாதுகாப்பு கருதி அதிகபட்மசாக 450 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது.

4. டிஜிவி ரெசியூ- பிரான்ஸ்

‘டிஜிவி ரெசியூ- பிரான்ஸ்’ பிரான்ஸ் நாட்டில் இயக்கப்படும் இந்த புல்லட் ரயில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் பறக்கும்.

5. சீமென்ஸ் வெலாரோ இ-ஏவிஎஸ்103

ஸ்பெயின் நாட்டில் இயக்கப்படும் ‘சீமென்ஸ் வெலாரோ புல்லட் ரயில்’ மணிக்கு சராசரியாக 350 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. சோதனை ஓட்டத்தின்போது இந்த ரயில் மணிக்கு 400 கிமீ வேகத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் புல்லட் ரயில்

மும்பை- ஆமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மணிக்கு 320 கிமீ வேகம் வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 2 மணிநேரத்தில் கடந்துவிடும். நாட்டின் இரு முக்கிய வர்த்தக நகரங்களுக்கு இடையிலான இந்த புல்லட் ரயில் திட்டம் 2023- ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close