[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

புற்றுநோயை வென்ற தன்னம்பிக்கை பெண்மணி..தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தின சிறப்பு பகிர்வு

national-cancer-awarness-day-special-story

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

நம்மில் பலர் ‌’எந்த நோய் வேண்டுமானால் வரட்டும் புற்றுநோய் மட்டும் ‌வரக்கூடாது‌’ என்று சொல்வதுண்டு. அப்படிப்பட்ட புற்றுநோயால் பாதிக்கபட்ட ஒரு‌வர் அதிலிருந்து மீண்டு வந்து மற்றவர்களுக்கு முன் உதார‌ணமாக திகழ்கிறார்.

கிரேஸி, மார்பகப் புற்று நோயால் கடந்த 2002ம் ஆண்டில் பாதிக்கப்பட்டார். தனக்கு புற்றுநோய் என்று தெரிந்ததும் அதை எதிர் கொள்ள பயந்த இவர், பின்னர் மருத்துவர்களின் தொடர் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் மூலமாக அ‌திலிருந்து முற்றிலுமாக குணமடைந்து ஆறே மாதங்களில் பணிக்குச் செல்ல ஆரம்பித்தார்.

புற்றுநோய் காரணமாக வேதனையான வாழ்க்கை, சிகிச்சை காரணமாக முடி, நகங்கள் இழந்து தோற்றம் மாறும் என்று சுற்றத்தார், ‌நண்பர்கள் கூறினாலும் அதனை த‌ன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு தொட‌ர் சிகிச்சைகளால் தவிடுபொடி ஆக்கினார் கிரேஸி.

மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு எப்படி சிகிச்சை‌ மேற்கொள்ள பழகிவிட்டோமோ‌ அதேபோன்று புற்றுநோயையும் கண்டு அஞ்சாமல்‌ போதிய விழிப்புணர்வோடு வாழ்ந்தால், வாழ்க்கை தொடர்ந்து இனிமையானதாக நீடிக்கும் என்பதற்கு கிரேஸி சிறந்த உதாரணம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close