[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

இன்று உலக சுனாமி விழிப்புணர்வு தினம்

first-edition-of-world-tsunami-awarness-day-being-observed-today

சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று (நவம்பர் 5) உலக சுனாமி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

‘சுனாமி’ என்பது ஜப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் “துறைமுக அலை” என்று பொருள். ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு நிகழ்ந்த ஆழிப்பேரலை தாக்குதலில், பல்வேறு கட்டடங்கள், கார்கள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 18 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும் அச்சத்தின்பிடியில் அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சுனாமி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 5ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கொண்டாட ஐக்கிய நாடுகள் அவையில் கடந்த 2015 டிசம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி முதல் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

முதல் சுனாமி:

கடந்த 400 வருடங்களில் ஏற்பட்ட சுனாமி பாதிப்புகள் பதிவு செய்துள்ள ஜப்பான் பேராசியர் ஃபுமீஹிகோ இமாமிரோ, கடந்த 1755ல் லிஸ்பனில் நிலநடுக்கத்துடன் ஏற்பட்ட சுனாமியில் சுமார் 50,000 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், 17 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் பெருவில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் சிக்கி 30,000-த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார். மத்திய தரைக்கடல் மற்றும் வட அமெரிக்க நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டதாக அவரது தரவுகள் கூறுகின்றன.

இதேபோல பெல்ஜியத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு மையத்தின் தகவல்களின்படி, கடந்த 1996 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் 16 சுனாமிகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் 2004-ல் ஏற்பட்ட சுனாமி மற்றும் 2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட டோஹோகூ சுனாமி உள்ளிட்ட 21 நாடுகளில் ஆழிப்பேரலைகளால் 2,50,900 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுனாமி விழிப்புணர்வு தினம்:

சுனாமி பாதிப்புகளை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குறைக்க முடியும் என்கிறது ஐ.நா. இதனால் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தில் மக்களிடையே சுனாமி பாதிப்புகள் குறித்தும், அதுபோன்ற அவசர காலங்களில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close