[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

அமெரிக்காவின் அடையாளம்: 200 ஆண்டுகள் பழமையான வெள்ளை மாளிகையின் சிறப்புகள்

history-of-america-white-house

உலகம் முழுவதும் பிரபலமான ஒரு கட்டடம் அமெரிக்க அதிபர் மாளிகை. அமெரிக்காவின் அடையாளமாக விளங்கும் இந்தத் கட்டடத்தின் சிறப்புகள் குறித்துப் பார்க்கலாம்.

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க அதிபர்களின் அதிகாரப் பூர்வ இல்லமாகவும், முதன்மை அலுவலகமாகவும் திகழும் இந்தக் கட்டடம், தனது நிறத்தாலேயே இந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது.1600, பென்சில்வேனியா சாலை, வாஷிங்டன் டி.சி. உலகின் அதிகார மையமாகத் விளங்கும் கட்டடம் அமைந்திருக்கும் முகவரி இதுவே.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்கப் புரட்சிப் படைகள் வெற்றிபெற்று தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டிருந்த நேரம். அதிபர் தங்குவதற்கும் அலுவல்களை மேற்கொள்வதற்கும் ஒரு மாளிகை தேவை என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1789 முதல் இரண்டு ஆண்டுகளில் பல கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனாலும் எதுவும் அதிபருக்கு வசதியானதாக இல்லை என்று கருதப்பட்டதால், தற்போதைய இடத்தில் புதிய அதிபர் மாளிகை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

ரோமானிய கட்டடக் கலை மாதிரியில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டடத்துக்கு 1792-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. வெள்ளை இனத்தவரும், அடிமை விலங்கில் இருந்து விடுவிக்கப்பட்ட கறுப்பினத்தவர்களும் இணைந்து இந்தக் கட்டப் பணிகளை மேற்கொண்டனர். சுமார் 8 ஆண்டுகாலம் நீடித்த கட்டுமானப் பணிக்குப் பிறகு, 1800-ம் ஆண்டு கட்டடம் ஓரளவு தயாரானது. சுண்ணாம்புக் கரைசல் கொண்டு வெள்ளையடிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் அப்போது அதிபராக இருந்த ஜான் ஆடம்ஸ் முதன் முதலில் குடியேறினார்.

அன்று முதல் வரலாற்றில் பல ஏற்றங்களையும் சோகங்களையும் சந்தித்திருக்கிறது இந்த மாளிகை. 1814-ம் ஆண்டு அமெரிக்காவுக்கும் ஆங்கிலேயப் படைகளுக்கும் இடையே நடந்தபோது, வெள்ளை மாளிகை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது. வெளிப்புறச் சுவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தன.

தேசிய எழுச்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட வெள்ளை மாளிகையை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என்று தலைவர்கள் முடிவெடுத்தனர். மூன்று ஆண்டுகள் நீடித்த மறுகட்டுமானப் பணிக்குப் பிறகு பழையை கம்பீரத்துடன் எழுந்து நின்றது வெள்ளை மாளிகை. ஆப்ரஹாம், லிங்கன், ட்ருமன், ஜான்.எஃப் கென்னடி போன்ற அதிபர்கள் வெள்ளை மாளிகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர்.

தற்போது வெள்ளை மாளிகை அமைந்திருக்கும் பரப்பு சுமார் 18 ஏக்கர். இதில் ஆறு தளங்களும் 132 அறைகளும் உள்ளன. 35 குளியலறைகள், 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 8 மாடிப் படிகள், 3 மின் தூக்கிகள் என இந்த மாளிகை பிரமாண்டமானது. அதிபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சமைப்பதற்காகவே 5 சமையல் கலைஞர்கள் எப்போதும் பணியில் இருப்பார்கள். பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சிக்குத் தேவையான பல வசதிகளையும் வெள்ளை மாளிகை கொண்டிருக்கிறது.

டென்னிஸ், பேட்மின்டன் பவுலிங் விளையாட்டரங்குகளும் , நீச்சல் குளமும் முன்புறப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. அதிபர் தனது குடும்பத்துடன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கான சிறிய திரையரங்கம் ஒன்றும் வெள்ளை மாளிகையின் உள்ளேயே கட்டப்பட்டுள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பேயே சக்கர நாற்காலிகள் உள்பட மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி வருகிறது வெள்ளை மாளிகை.

அதிபரின் கார் மற்றும் ஹெலிகாப்டர்கள் வந்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளும் உள்ளன. முக்கியத்துவம் வாயந்த இந்தக் கட்டடத்தின் பாதுகாப்புப் பணிகளை அமெரிக்காவின் ரகசியப்படை கவனித்துக் கொள்கிறது. வெள்ளை மாளிகையின் முன்புறத் தோற்றம் உலகம் எங்கும் பிரபலமாநது. வடக்கு மற்றும் தெற்கு நோக்கி இரு முதன்மையான வாசல்கள் இருந்தாலும், பெரும்பாலும் வடக்கு நோக்கி இருக்கும் தோற்றமே அதிபர் மாளிகையின் அடையாளமாக இருக்கிறது.

புதிய அதிபர்கள் குடியேறும்போது மகிழ்ச்சியையும், பழைய அதிபர்கள் வெளியேறும்போது சோகத்தையும் அடிக்கடிப் பார்த்து வருகிறது இந்த மாளிகை..!

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close