[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

தனித்துவமான புடவைக்கான தேடல்.. பட்டுப் புடவை என்றும் புதிது..!

search-for-unique-pattu-saree

நவீனமயமாதலால் நாம் சூழப்பட்டிருந்தாலும், பட்டுப் புடவைகள் பண்டிகை நாட்களின் பிரியா அங்கமாகவே திகழ்கின்றன. அவற்றின் மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு குறையாத வண்ணம், இளம்பெண்களையும் கவரும் புதிய ரகங்கள் இந்த தீபாவளிக்கு அறிமுகமாகியுள்ளது. சந்தைக்கு வந்திருக்கும் புதிய வகை பட்டுப் புடவைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

தமிழர்களின் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கும் உடையாக பட்டுப் புடவைகள் திகழ்கின்றது. அந்தஸ்த்தின் வெளிப்பாடாக கருதப்பட்ட புடவைகள் இன்று தனித்துவத்தின் அடையாளங்களாக பார்க்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, அணிய எளிதாகவும், சற்றே மாறுபட்டதாகவும் பட்டுப்புடவைகள் இருக்க வேண்டும் என்பதே இளம் பெண்களின் எதிர்பார்ப்பு.!

அந்த வகையில் இளம் பெண்களை அதிகம் கவரும் contemporary pattern, textured stripes, என பல புடவைகள் இந்த ஆண்டுக்கான புதிய வரவுகளாக வந்துள்ளன. இவை தவிர நெசவாளர்களுக்கு சவால் விடுக்கும் ரகங்களாக இந்த ஆண்டு blend and trend புடவைகள் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

தனித்துவமான புடவைகளையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். அதிலும் ஆண்டிற்கு 100 புடவைகள் வரை சேர்க்கும் பெண்களும் இருகின்றனர் என்பது புதிய தகவல். மொத்தத்தில், பட்டுப்புடவை அணியும் பெண்களின் தேடல் வண்ணம், சரிகை, விலை போன்றவற்றை கடந்து ஒரு புதிய கோணத்தில் அமைந்திருப்பதே உண்மை. இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் பட்டு புடவைப் பிரியர்கள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close