[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

சாக்பீஸில் கைவண்ணம்: ஓவிய ஆசிரியரின் சாதனை முயற்சி

dindukal-drawing-teacher-achieved-in-chalk-piece-art

திண்டுக்கலைச் சேர்ந்த ‌ஓவிய ஆசிரியர் ஒருவர் சாக்பீஸைக் கொண்டு தலைவர்களின் படத்தை அச்சு அசலாக வரைந்து மக்களை ஈர்த்து வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். இளங்கலை ஒவியம் பட்டம் பெற்ற இவர் குஜிலியம்பாறை அரசு பள்ளியில் பகுதி நேர ஒவிய ஆசிரியராகப் பணியா‌‌ற்றி வருகிறார்.

சாக்பீஸில் மகாத்மா காந்தி, அப்துல் கலாம், பாரதியார், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட ‌‌30க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்களை அவர் வரைந்துள்ளார். அதே போல் சாக்பீஸில் கண் கவரும் இயற்கை காட்சிகளையும் வரைந்து வருகிறார்.

சிறுவயதில் தான் வெள்ளைத் தாளில் கிறுக்கியவை ஒவியமானதை கண்டு ஆச்சர்யமானார். இன்று தான் பயின்ற ஒவிய கலை அழிந்து விட கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவியக்கலையை எப்படி வளர்ப்பது சாதனை படைப்பது என யோசித்த சபரிநாதன் கடந்த 2013- இல் ஆயில் பெயின்ட், வாட்டர் பெயின்ட், சிங்கர் பெயின்ட், பிளாக் பெண் டிராயிங்க் என ஒவியங்கள் வரைந்து சாதனை படைத்தார்,

தற்போது வகுப்பறையில் பிளாக் போர்டில் எழுதபடும் சாக்பிஸில் ஒவியங்கள் வரைந்தால் சாக்பீஸ் உறிஞ்சிவிடும் படம் நிற்காது என யோசித்த சபரிநாதன் சாக்பீஸில் பெவிக்கால் கோட்டிங் இரண்டு முறை அடித்து பின்னர் அதனை வெயிலில் காயவைத்து நீர் வண்ணம் தீட்டி தலைவர்கள் படம் வரைந்தார்.

அந்த வகையில் நேரு, காந்தி, அப்துல் கலாம், பாரதியார், சுபாஷ் சந்திர போஸ் , விவேகானந்தர், காமராஜர், திருப்பூர் குமரன் போன்ற தலைவர்களின் படம் வரைந்து சாதனை படைத்து வருகிறார். அதே போல் சாக்பீஸில் இயற்கை காட்சிகளும் வரைந்து வருகிறார். இதுவரை 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் படம் இயற்கை காட்சிகள் வரைந்துள்ளார். வரும் காலத்தில் ஒரே சாக்பீஸில் 1000 அப்துல்கலாம் முகம் வரைவது தான் லட்சியம் என தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான வளர்ச்சியால் இன்று ஒவியக்கலை அழிய துவங்கி வருவதால் இதற்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் சபரிநாதனிடம் பயிலும் மாணவர்களில் வருடந்தோறும் ஒருவர் கும்பகோணம் அரசு ஒவியப்பள்ளியில் பயின்று ஒவியக்கலையை வளர்க்க வேண்டும் என்பதே இவரது நோக்கம் ஆகும். தற்போது பகுதி நேர ஆசிரியராக உள்ள சபரிநாதன் முழுநேர பணியாளராக ஆக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close