[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினம்

today-mahatma-gandhi-birthday

இந்திய தேசத்தின் தந்தையான ‘மகாத்மா காந்தி’ குஜராத் மாநிலம் போர்பந்தரில் 1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இந்திய விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர், விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

சத்தியாக்கிரகம் என்று அழைக்கப்படும் இவரது அறவழிப் போராட்டமே இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்தது. இவர் பிறந்த நாளை ஒட்டுமொத்த இந்தியாவிலும் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

சாதி, மதம், இனம், மொழி, என பல்வேறு பேதங்களை, ஒதுக்கி, நாம் அனைவரும் இந்தியர்கள் என்று ஒவ்வொருவர் மனதிலும் சுதந்திர உணர்வை ஊட்டியவர் மகாத்மா காந்தி. இவரது தலைமையின் கீழ், உப்பு சத்தியாக்கிரகம், சுதேசி இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இதன் பிறகே ஆங்கிலயே அரசு இந்தியாவிற்கு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் வழங்கியது. அன்று மொத்த தேசமும் சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

தீண்டாமைக்கெதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். சாதி ஒழிய வேண்டும் என்றும் விரும்பியவர். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர். துரதிஷ்டவசமாக 1948-ம் ஆண்டு ஜனவரி 3-0ம் தேதி டெல்லியில் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனிடையே, இறந்துபோன ஒருவருக்கு நோபல் பரிசு கொடுக்கும் வழக்கம் இல்லை என்பதால் காந்தியடிகளுக்கு இப்பரிசு கிட்டவில்லை, என்றாலும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நோபல் கமிட்டி 1948-இல் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் கொடுப்பதில்லை என்று முடிவு செய்து யாருக்கும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close