JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
சிறப்புக் கட்டுரைகள் 01 Oct, 2016 07:15 AM

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று

Cinque Terre

‘நடிப்பு திலகம்’, ‘செவாலியே’ என்று எல்லோராலும் போற்றப்படும் ‘சிவாஜி கணேசன்’ 1928ம் ஆண்டு இதே நாளில் தான்(அக்டோபர் 1) பிறந்தார். ‘விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்’ என்பது தான் இவரது இயற்பெயர்.

‘சிவாஜி’ கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் கருணாநிதியின் வசனத்தில், சிவாஜி கணேசன் கடவுள் குறித்து பேசும் காட்சி பெரும் புகழ் பெற்றது. மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன்.இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேசத்தலைவர்களின் பாத்திரங்களில் திறம்பட நடித்தார். 300க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும், 9 தெலுங்கு படங்களிலும், 2 இந்தி மற்றும் ஒரு மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவற்றின் காரணமாக சிவாஜி கணேசன் நடிப்புச் சக்ரவர்த்தி என்று போற்றப்படுகிறார். பாசமலர், வசந்த மாளிகை உள்ளிட்ட படங்கள் இவரது உணர்ச்சிப் பூர்வமான நடிப்புக்கு பெயர் பெற்றவை.

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். கலைமாமணி, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியர், தாதாசாகெப் பால்கே உள்ளிட்ட ஏராளமான விருதுகளை சிவாஜி கணேசன் பெற்றுள்ளார். தனது 72வது வயதில் 2001ம் ஆண்டு ஜுலை 21ம் தேதி மறைந்தார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads