[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்ட தினம் இன்று

tody-in-history-tamil-wikipedia-starts-today

விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் ஆங்கில மொழியில் ஜனவரி 15, 2001-இல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியா 2003 ம் ஆண்டு இதே நாளில் தான்(செப்டம்பர் 30ம் தேதி) ஆரம்பிக்கப்பட்டது.

விக்கிப்பீடியா என்பது, இலாப நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், பன்மொழிகளில் கூட்டாகத் தொகுக்கப்படும், கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும். அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதை நோக்கமாக கொண்டு விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. ‘

தமிழ் விக்கிப்பீடியாவில் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலும் விக்கிப்பீடியாவில் உள்ள எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும். மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது. செப்டம்பர் 2016 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயல்படுகிறது.

நமக்கு தெரிந்த ஒவ்வொரு விஷயத்தை பற்றியும், கட்டுரையாக தொகுக்க முடியும். அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் திருத்தி சேர்க்க முடியும். எனினும் முக்கியமான அல்லது குழப்பம் விளைவிக்கும் ஆபத்துடைய சில கட்டுரைகள் தொகுக்க முடியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு பலரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதற்கு முதலில் நாடும் தளமாக விக்கிப்பீடியா உள்ளது.

கூகுளில் எதை பற்றி தேடினாலும் முதலில் வருவது விக்கிப்பீடியா தான். உலக அளவில் அதிக மக்களால் பார்க்கப்படும் தலைச்சிறந்த இணையதளங்களுக்கான, அலெக்ஸா தரவரிசைப்பட்டியலில், 6வது இடத்தில் உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close